MS Dhoni smoking video: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி விரைவில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனில் களமிறங்க உள்ளார். இருப்பினும், தோனி ஹூக்கா புகைபிடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தோனி எப்போதும் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய அணியிலும் சரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் சரி வீரர்கள் பிட்டாக இருப்பது முக்கியம் என்று பலமுறை கூறி உள்ளார். முந்தைய ஐபிஎல் சீசனில் முழங்கால் வழியால் தோனி அவதிப்பட்டு வந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மட்டுமே விளையாடி வருகிறார்.
Influential thala pic.twitter.com/qJlYCApxzJ
—(@BholiSaab18) January 6, 2024
முன்னாள் ஆஸ்திரேலிய டி20 கேப்டன் ஜார்ஜ் பெய்லி, எம்எஸ் தோனி இளம் வீரர்களுடன் ஹூக்கா பயன்படுத்துவார் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தார். பெய்லி 2009 மற்றும் 2012 வரை சென்னை அணிக்காக விளையாடி வந்தார். மேலும் 2016ல் தோனி தலைமையில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஒரு வீரராக இருந்தார். 2018 ஆம் ஆண்டில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் பகிரப்பட்ட எம்எஸ் தோனிக்கான ஒரு ட்ரிபூட் வீடியோவில், ஜார்ஜ் பெய்லி தோனியின் அதிகம் அறியப்படாத சில பக்கங்களை பற்றி பகிர்ந்து இருந்தார். “தோனிக்கு ஷீஷா அல்லது ஹூக்காவை கொஞ்சம் பிடிக்கும். எனவே, அவர் அடிக்கடி தனது அறையில் அதை பயன்படுத்துவார். தோனியின் அறை எப்போதும் திறந்து தான் இருக்கும். வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் அவருடன் சென்று பேச முடியும்.
அவரிடமிருந்து நான் எடுத்துக் கொண்ட மிகப்பெரிய விஷயம், அணியின் அமைதியை பாதிக்காத வகையில் அமைதியாக இருக்கும் திறன். குழப்பம் மற்றும் பல சந்தர்ப்பங்களில் விளையாட்டில் என்ன நடந்தாலும், அவர் விக்கெட்டுகளுக்குப் பின்னால் அல்லது கையில் பேட்டுடன் மிகவும் அமைதியாக இருப்பதைப் பார்க்கும்போது, அவருக்கு ஒரு திட்டம் இருப்பதாக நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள்" என்று கூறி இருந்தார்.
42 வயதிலும் கிரிக்கெட் விளையாடும் ஒரு சில கிரிக்கெட் வீரர்களில் தோனியும் ஒருவர். அவர் இன்னும் தனது உடற்தகுதியை பராமரித்து, விளையாட்டில் சிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார். ஒரு கேப்டனாக தோனியின் வெற்றிக்கு ஒரு காரணம், வீரர்களுக்கு ஆதரவளிக்கும் திறன் மற்றும் இளைஞர்களுக்கு பிரகாசிக்க வாய்ப்பு அளித்தது. தோனி 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து வழிநடத்தி வருகிறார். வரவிருக்கும் சீசன் அவரது கடைசி சீசனாக இருக்கும், மேலும் பல ரசிகர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க | ஓய்வுபெற்றார் புஷ்பா வார்னர்... அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ