விராட் கோலியிடம் கோபத்தை காட்டிய தோனி... அதுவும் அவர் மொறைச்சா அவ்வளவு தான்!

MS Dhoni: கேப்டன் கூல் என அழைக்கப்படும் தோனியின் கோபம் களத்தில் எப்படி இருக்கும், அவர் கோபமாக விராட்டை நோக்கி என்ன சொன்னார் போன்றவற்றை இஷாந்த் சர்மா சமீபத்திய பேட்டியில் நினைவுக்கூர்ந்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 28, 2023, 12:05 PM IST
  • இஷாந்த் சர்மா - விராட் கோலி டெல்லி அண்டர் 17 அணியில் இருந்து பழக்கம்.
  • இஷாந்த் சர்மா 311 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • இறுதிப்போட்டியில் கேட்ச்சை விட்ட இஷாந்திடம் தோனி சொன்னதையும் இதில் காணலாம்.
விராட் கோலியிடம் கோபத்தை காட்டிய தோனி... அதுவும் அவர் மொறைச்சா அவ்வளவு தான்! title=

MS Dhoni: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 'கேப்டன் கூல்' என்று அனைவராலும் போற்றப்படுபவர். ஏனெனில் அவர் ஆட்டத்தின்போது, அவர் பெரியளவில் கோபத்தை வெளிப்படுத்த மாட்டார் மற்றும் வீரர்களிடம் கோபப்படாமல் இருப்பார். 

ஆனால் தோனி களத்தில் வீரர்களிடம் கோபப்படுவார் என்றும், அவர் கோபமாக இருக்கிறார் என்பதை வீரர்கள் மீதான அவரின் முறைப்பான பார்வையே வெளிப்படுத்திவிடும் என்றும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். ஒருமுறை விராட் கோலி மீதும் தோனி கோபப்பட்டதாகவும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். ஒரு யூ-ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடந்த சம்பவத்தை இஷாந்த் நினைவு கூர்ந்தார். மேலும் தோனி எப்படி கோலியை சமாதானப்படுத்த முயன்றார் என்பதையும் வெளிப்படுத்தினார். 

இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த இஷாந்த் ஷர்மா, "தோனி அதிகம் கோபப்பட மாட்டார், ஆனால் ஒருமுறை கோலியிடம் அவர் தனது பொறுமையை இழந்தார். ஷிகர் தவானின் அறிமுக டெஸ்டில் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிக்கொண்டிருந்தோம். டெஸ்ட் போட்டி இரண்டாவது இன்னிங்ஸில் சிக்கல் வந்தது. இருப்பினும், நாங்கள் வெற்றி பெற்றோம். கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஷிகர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்ய முடியவில்லை. டெஸ்ட் போட்டியில் சிக்கல் இருந்தபோது, சீக்கு (விராட் கோலி) அவுட் ஆனார். 

மேலும் படிக்க | புறகணிக்கப்பட்ட முக்கிய மைதானங்கள்... உலகக்கோப்பையை ஆட்டிப்படைக்கும் அரசியல் என்ன?

கோலியிடம் தோனி சொன்னது

போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, தோனி, கோலியிடம், 'நம் அணிக்கு ஒரு பேட்டர் குறைவாக உள்ளார் என்பதை தெரிந்தும், நீங்கள் ஏன் அந்த ஷாட்டை ஆடினீர்கள்' என்று அவர் கோபப்படாமல் ஒரு விஷயத்தைச் சொல்லி விராட்டுக்கு உணர்த்தினார்” என்றார்.

2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரவி போபராவின் கேட்சை கைவிட்ட சம்பவத்தையும் இஷாந்த் சர்மா நினைவு கூர்ந்தார். "ஜடேஜாவின் பந்துவீச்சில் போபரா தடுமாறினார். அவர் அவுட்டாகிவிடுவார் என்று நினைத்தேன், நான் நடுப்பகுதியில் நின்று கொண்டிருந்தேன். எனவே, நான் ஏற்கனவே திரும்பிச் சென்றேன். ஆனால் பேட்டர் அதை மிட்-விக்கெட் நோக்கி விளையாடினார், நான் பந்து வந்த திசைக்கு சென்று கேட்ச் எடுப்பதற்குள், பந்து தரையில் விழுந்தது. அதில் போபாரா 2 ரன்கள் எடுத்தார்.

கண் அசைவே போதும்

அப்போது தோனி எதுவும் பேசவில்லை. தந்தை தங்கள் குழந்தைகளின் மீது கோபப்படுவது போல் இருந்தது, அதை புரிந்து கொள்ள கண் வெளிப்பாடுகள் போதுமானதாக இருந்தது. ஆனால் பின்னர், அவர் என் அருகில் வந்து அமைதியாக கூறினார், 'உங்களால் பீல்டிங் செய்ய முடியாவிட்டால் அங்கே நிற்காதீர்கள்'. அதற்குப் பிறகு நான் அமைதியாக Third Man திசைக்கு சென்று பீல்டிங் செய்தேன்" என்று இஷாந்த் சர்மா மேலும் கூறினார்.

இஷாந்த் சர்மா இந்தியாவுக்காக 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்க | ODI 2023: இவர்களில் யார் கோப்பையை கைப்பற்றுவார்? மகுடம் சூடப்போகும் அணித்தலைவர்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News