IPL 2020: Commentary குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார் Sanjay Manjrekar: முழு பட்டியல் இதோ!!

எந்த ஒரு விளையாட்டையும் நாம் பார்ப்பதில் இருக்கும் அளவு மகிழ்ச்சி அதன் வர்ணனையை கேட்பதிலும் நிச்சயமாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2020, 12:10 PM IST
  • IPL 2020, செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) தொடங்கவுள்ளது.
  • அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் Star Sports வர்ணனையாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
  • அதிர்ச்சியூட்டும் வகையில் இந்த பட்டியலில் டீம் இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ரேகரின் பெயர் இல்லை.
IPL 2020: Commentary குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார் Sanjay Manjrekar: முழு பட்டியல் இதோ!! title=

புதுடெல்லி: “What a Shot!!” ..... “And.. that is a Sixer!!” ..... "What a Catch!!" 

இப்படி எத்தனை எத்தனை உணர்ச்சிகரமான வரிகள்…. மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஆர்ப்பரிப்புகள்!! எந்த ஒரு விளையாட்டையும் நாம் பார்ப்பதில் இருக்கும் அளவு மகிழ்ச்சி அதன் வர்ணனையை (Commentary) கேட்பதிலும் நிச்சயமாக உள்ளது. தொலைக்காட்சி வருவதற்கு முன் வானொலி மூலம் வர்ணனையாளர்கள் முழு விளையாட்டையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

காலங்கள் மாறினாலும், விளையாட்டுப் போட்டிகளுக்கு உள்ள வர்ணனை அதாவது கமெண்டரிகளுக்கான முக்கியத்துவம் குறையாமல்தான் உள்ளது.

IPL 2020, செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) தொடங்கவுள்ளது. இதில் தங்கள் வர்ணனையின் மூலம் நம் காதுகளுக்கு விருந்தளிக்கப்போகும், இந்த சீசனுக்கான வர்ணனையாளர்களின் குழுவின் (Commentators list) முழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் Star Sports பெயர்களை அறிவித்துள்ளது. Star Sports இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வர்ணனை குழுவில் பல புகழ்பெற்ற வீரர்களின் பெயர்கள் உள்ளன.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, குமார் சங்கக்காரா, இயன் பிஷப், கெவின் பீட்டர்சன் மற்றும் பல வீரர்கள் இந்த பட்டியலில் ஆங்கில குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். லிசா ஸாலேகர் மற்றும் அஞ்சும் சோப்ரா ஆகிய 2 பெண் வர்ணனையாளர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இருப்பினும், மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த பட்டியலில் டீம் இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ரேகர் (Sanjay Manjrekar) நீக்கப்பட்டுள்ளார். 2008 IPL தொடக்கத்திலிருந்து மஞ்ச்ரேகர் வர்ணனைக் குழுவின் ஒரு பகுதியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பேட்ஸ்மேன் மஞ்ச்ரேகர் இந்தியாவுக்காக 37 டெஸ்ட் மற்றும் 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இது தவிர, ஆகாஷ் சோப்ரா, இர்பான் பதான், ஆஷிஷ் நெஹ்ரா, சஞ்சய் பங்கர் உள்ளிட்ட பலர் இந்தி வர்ணனைக் குழுவின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக இருந்த ஸ்ரீகாந்த், தமிழிலும், எம்.எஸ்.கே.பிரசாத் தெலுங்கிலும் வர்ணனை அளிப்பார்கள்.

ALSO READ: IPL 2020: சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக CSK-வில் சேரப்போகும் அதிரடி ஆட்டக்காரர் இவர்தானா?

இந்தி வர்ணனைக் குழுவின் முழு பட்டியல்: - ஆகாஷ் சோப்ரா, இர்பான் பதான், ஆஷிஷ் நெஹ்ரா, ஜதின் சப்ரு, நிகில் சோப்ரா, கிரண் மோரே, அஜித் அகர்கர் மற்றும் சஞ்சய் பங்கார்.

ஆங்கில வர்ணனைக் குழுவின் முழு பட்டியல்: - இயன் பிஷப், சைமன் டோல், குமார் சங்கக்காரா, ஹர்ஷா போக்லே, சுனில் கவாஸ்கர், ரோஹன் கவாஸ்கர், தீப் தாஸ்குப்தா, சிவ ராமகிருஷ்ணன், அஞ்சும் சோப்ரா, முரளி கார்த்திக், மார்க் நிக்கோலஸ், கெவின் பீட்டர்சன், எல்.பி. டேரன் கங்கா, போமி பாங்வா, மைக்கேல் ஸ்லேட்டர் மற்றும் டேனி மோரிசன்.

டக்-ஔட்டில் இருக்கப்போகும் வர்ணனையாளர்களின் பட்டியல்: - டீன் ஜோன்ஸ், ஸ்காட் ஸ்டைரிஸ், பிரையன் லாரா, பிரட் லீ மற்றும் கிரீம் ஸ்வான்.

ALSO READ: IPL 2020: புதிய பொறுப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மீண்டும் இணைந்தார் Shane Warne

Trending News