ஐதராபாத் அணி வீரர் விரித்திமான் சாஹாவுக்கு கொரோனா தொற்று!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் விரித்திமான் சாஹாவிற்கு கொரோனா தொற்று உறுதி இன்று செய்யப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 4, 2021, 02:44 PM IST
ஐதராபாத் அணி வீரர் விரித்திமான் சாஹாவுக்கு கொரோனா தொற்று! title=

IPL 2021 Latest Update: IPL 2021: நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணி வீரர் விரித்திமான் சாஹாவுக்கு கொரோனா (Coronavirus) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கொல்கத்தா சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியார், மற்றும் CSK அணியை சேர்ந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி,மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தின் கிளீனர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

ALSO READ: IPL 2021, CSK vs RR போட்டி நடக்காதா? CSK அணியில் யாருக்கு தொற்று? விவரம் உள்ளே

இதற்கிடையில் அடுத்தடுத்த வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது. அணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து கவலை தெரிவிப்பதால் ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு என  தகவல் வந்துள்ளது. இந்த தகவலை பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா உறுதிபடுத்தியுள்ளார். 

முன்னதாக இன்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் கருத்துப்படி, வீரர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஐபிஎல் (IPL) உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த கடினமான சூழலிலும் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்த BCCI  தீவிரமாக இருப்பது ஏன். வீரர்கள் பாதுகாப்பான முறையில் மக்களுக்கு கொண்டாட்டத்தை அளித்து வருவதாக தான் நம்பியதாகவும் ஆனால் தற்போது வீரர்களுக்கு கொரோனா (Coronavirus) பாதித்துள்ளது. எனவே ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்ற அவர் கூறியிருந்தார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News