t10 Cricket; சாம்பியன் பட்டம் வென்றது ZEE5-ன் நார்த்தன் வாரியர்ஸ்...

2-வது t10 கிரிக்கெட் சாம்பியன்சிப் போட்டியில் பாக்த்தூன்ஸ் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நார்த்தன் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது!

Last Updated : Dec 3, 2018, 12:21 PM IST
t10 Cricket; சாம்பியன் பட்டம் வென்றது ZEE5-ன் நார்த்தன் வாரியர்ஸ்... title=

2-வது t10 கிரிக்கெட் சாம்பியன்சிப் போட்டியில் பாக்த்தூன்ஸ் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நார்த்தன் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது!

8 அணிகள் பங்கேற்ற t10 சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி கடந்த நவம்பர் 21 துவங்கி துபாயில் நடைப்பெற்று வந்தது. இத்தொடரின் இறுதி போட்டி நேற்று சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் பாக்த்தூன்ஸ் மற்றும் நார்த்தன் வாரியர்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் பாக்கத்தூண்ஸ் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நார்த்தன் வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 140 ரன்கள் குவித்தது. அணியின் தரப்பில் ரோவ்மென் பவுள் 661(25) ரன்கள் குவித்தார். 

இதனையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாக்கத்தூண்ஸ் அணி களமிறங்கியது. இமாலைய இலக்கை நோக்கி பாக்கத்தூண்ஸ் அணி அபாரமாக விளையாடிய போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே பாக்கத்தூண்ஸ் அணியால் குவிக்க முடிந்தது. பாக்கத்தூண்ஸ் தரப்பில் ஆண்ட்ரே பிளட்சர் 37(18) ரன்கள் குவித்தார். இதனையடுத்து நார்த்தன் வாரியர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

3-ஆம் இடத்திற்காக நடைப்பெற்ற மற்றொரு போட்டியில் பெங்கால் டைகர்ஸ் மற்றும் மாரத்தா அரேபியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பெங்காள் டைகர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடரை பொருத்தமட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக நிக்கோலஸ் பூரன்(324) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிக விக்கெட் குவித்த வீரராக ஹர்டூஸ் வில்ஜியோன்(18) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் டிஜிட்டர் தளமான ZEE5 சமீபத்தில் 190+ நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. T10 கிரிக்கெட் லீக்கின் இரண்டாவது பருவத்தில் நார்த்தன் வாரியர்ஸ் தலைப்பின் விளம்பரதாரர்களாகவும் தற்போது செயல்பட்டு வந்ததது. T10 கிரிக்கெட் லீக்கின் இந்த பருவத்தில் அறிமுகமான மூன்று புதிய அணிகளில் நார்த்தன் வாரியர்ஸ் ஒன்றாகும். அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற ZEE5 ஸ்பான்ஸர்ட் நார்த்தன் வாரியர்ஸ் அணி வரும் தொடர்களில் திறம்பட செயல்பட்டு கோப்பைகளை குவிக்கும் என எதிர்பார்கலாம்.

Trending News