காந்தி-மண்டேலா டிராபி: இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயண அட்டவணை

IND vs SA 2023 Tour: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் கலந்துக் கொள்ளும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 14, 2023, 08:52 PM IST
  • இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி
  • தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை திடீரென அறிவித்த பிசிசிஐ
  • 2023-24ஆம் ஆண்டுக்கான இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டிகள்
காந்தி-மண்டேலா டிராபி: இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயண அட்டவணை  title=

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய தொடர், வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி, ஜனவரி 2024 வரை நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தில், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி கலந்துக் கொள்ளும். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெள்ளிக்கிழமை மாலை புதிய சுற்றுப்பயணத்தை அறிவித்தது. இந்த தொடர் இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி வரை தொடரும். இந்தத் தொடர் 10 டிசம்பர் 2023 முதல் தொடங்கும்.

இந்திய அணியின் சுற்றுப்பயணம்

3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் பல நடைபெறும் என்று கூறிய பிசிசிஐ வெள்ளிக்கிழமை மாலை எதிர்பாராமல் திடீரென அறிவித்தது. இதைத் தவிர இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதி டர்பனில் டி20 போட்டியுடன் தொடர் தொடங்குகிறது.

மேலும் படிக்க | Best Bowlers: டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை அதிக முறை வீழ்த்திய பெளலர்ஸ்

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. பின்னர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 முதல் ஜனவரி 7 வரை தொடங்குகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் காந்தி-மண்டேலா டிராபிக்கான தொடராக விளையாடப்படும்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா 

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திரத் தொடர் இரண்டு சிறந்த டெஸ்ட் அணிகளைக் கொண்டுள்ளது. தங்கள் தாய் நாடுகளுக்காக மகத்தானபங்களிப்பை வழங்கிய இரு சிறந்த தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலாவைக் கவுரவிக்கும் டெஸ்ட் தொடர் முக்கியமானது. இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம், சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டியின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும், மேலும் இந்த முக்கிய தேதிகளில் அட்டவணை குறிப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இந்தியாவுக்கு எப்போதும் வலுவான ஆதரவு உள்ளது. சில பரபரப்பான போட்டிகளை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் (Cricket South Africa (CSA),) தலைவர் லாசன் நாயுடு, சுற்றுப்பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் படிக்க | கிரிக்கெட்டரை மட்டுமல்ல அவரது அப்பாவையும் அவுட்டாக்கிய பெளலர்கள் பட்டியல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News