எள்ளு வய பூக்கலையே... மீசையிலையும் மண்ணு ஒட்டலையே - அவுட்டான விரக்தியில் தடுமாறி விழுந்த வீரர்!

டி20 உலகக்கோப்பை தொடரில், நெதர்லாந்து அணிக்கு போட்டியில் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பியபோது, ஐக்கிய அரபு அமீரக வீரர் தடுமாறி கீழே விழுந்த வீடியோ வைரலாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 16, 2022, 09:04 PM IST
  • உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப்போட்டிகள் இன்று தொடங்கின.
  • இலங்கை அணியை வீழ்த்தி நமீபியா அணி வெற்றி.
  • ஐக்கிய அரபு அமீரகம் அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி.
எள்ளு வய பூக்கலையே... மீசையிலையும் மண்ணு ஒட்டலையே - அவுட்டான விரக்தியில் தடுமாறி விழுந்த வீரர்! title=

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் இன்று (அக். 16) தொடங்கியது. இந்த சுற்றில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் 'ஏ' பிரிவிலும், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாப்வே அணிகள் 'பி' பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. 

'ஏ' பிரிவில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ஆஸ்திரேலியாவின் கீலாங் நகரின் சைமண்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கிய இலங்கை - நமீபியா போட்டியில், நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணியை கதறவிட்டது. 

தொடர்ந்து, அதே மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் - நெதர்லாந்து அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நெதர்லாந்து அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

மேலும் படிக்க | 2022 டி20 உலகக் கோப்பைக்கான ரிசர்வ் டே விதி பற்றி தெரியுமா?

ஐக்கிய அரபு அமீரகம் அணி, நெதர்லாந்துக்கு 112 ரன்களையே இலக்காக நிர்ணயித்தது. இருப்பினும், 112 ரன்களை நெதர்லாந்து கடைசி ஓவர் வரை எடுத்து சென்றுதான் ஜெயித்தது. இப்போட்டியில், நெதர்லாந்து பந்துவீச்சாளர் பாஸ் டி லீடே மூன்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இப்போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு முகமது வாசிம் மட்டும் 41 ரன்களை எடுத்தார். மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்போது, எட்டாவது பேட்டராக களமிறங்கிய அயான் அப்சல் கான் 5 ரன்களில், கிளாசென் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அவுட்டானதை அடுத்து பெவிலியன் நோக்கி கவலை தோயந்த முகத்துடன் நடந்துசொன்றுகொண்டிருந்த அவர், பவுண்டரி லைனில் கவனிக்காமல் சென்றார். இதனால், கால் இடறி கையில் பேட்டுடன் அவர் கீழே விழுந்தார். விழுந்த சில நொடிகளிலேயே மீண்டும் எழுந்து பெவிலியன் நோக்கி சென்றார். 

தற்போது, அவர் கீழே விழுந்த அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அவுட்டான விரக்தியாக இருந்தாலும் பெவிலியனுக்கு கவனமாக செல்ல வேண்டாமா என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.   

மேலும் படிக்க | T20 World cup: ரோகித் சர்மாவுக்கு பந்துவீசிய 11வயது இளம் சிறுவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News