அமெரிக்க ஓபன் 2017: சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்

Updated: Sep 11, 2017, 08:35 AM IST
அமெரிக்க ஓபன் 2017: சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்
Courtesy: Twitter

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த நேற்று நடைபெற்றது. அதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர்கள் நடால் மற்றும் ஆண்டர்சன் இருவரும் மோதினர். 

ரபேல் நடால் முதல் செட்டை 6 - 3 என்ற கணக்கில் வென்றார். அதை தொடர்ந்து 2வது செட்டிலும் 6 - 3 என்ற கணக்கில் வென்றார்.

இதையடுத்து, 3-வது செட்டில் ஆண்டர்சன் ஓரளவு போராடினார். ஆனாலும், ரபேல் நடாலின் நேர்த்தியான ஆட்டத்தால் 6 - 4 என்ற கணக்கில் 3வது சுற்றில் வெற்றி பெற்றார். 

அத்துடன், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார். இது ரபேல் நடாலவின் 16-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.