இன்னிங்க்ஸ் வெற்றி பெறுமா இந்தியா!

Last Updated : Aug 14, 2017, 10:29 AM IST
இன்னிங்க்ஸ் வெற்றி பெறுமா இந்தியா! title=

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் சனி அன்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

தனது முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டை இழந்து 487 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் லக்ஷன் சந்தானன் 5 விக்கெட்டும், மாலிண்டா புஷ்பகுமார 3 விக்கெட்டும், விஷவா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் எடுத்தனர். 

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்தது. இந்தியாவை விட 352 ரன்கள் பின்தங்கி இருந்தது. இதனையடுத்து இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. 

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை தனது இரண்டாம் இன்னிங்க்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை அடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தினை துவங்கிய இலங்கை  தற்போதைய நிலவரப்படி 19 ஓவர் முடிவில் இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களுடன் விளையாடி வருகிறது.

புஷ்பகுமரா 0(27) மற்றும் மென்டிஸ் 6(9) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Trending News