ஐபிஎல் தொடரின் அடுத்த மகுடமாக மகளிர் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நவி மும்பை டி.ஒய். பாட்டீல் அகாடமி மைதானத்தில் தொடங்கியது. பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளும், லேசர் ஒளி விளக்குகளும் மைதானத்தை அலங்கரித்தன. அப்போது, கீர்த்தி சனான் மற்றும் கியாரா அத்வானி நடனம் அரங்கேறியது. அவர்களின் நடனம் தொடங்கியது முதல் மைதானத்தில் விழாக்கோலம் பூண்டது. இடி முழங்குவதுபோல் திக்கெட்டும் இசை முழக்கமாக இருந்தது. கூடவே அவர்கள் ஆடிய நடனம் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை எழுப்ப, கோலகலமாக மகளிர் ஐபிஎல் திருவிழா தொடங்கியது.
— Johns. (@CricCrazyJohns) March 4, 2023
மேலும் படிக்க | WPL 2023: இன்று முதல் மகளிர் ஐபிஎல்... எங்கு, எப்படி, எதில் பார்ப்பது?
கலைநிகழ்ச்சிகளுக்குப் பிறகு 5 அணிகளின் கேப்டன்களும் மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். கூடவே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர். இன்று நடைபெறும் முதல் போட்டியில் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை, பெத் மூனே தலைமையிலான குஜராத் ஜெயின்ட்ஸ் அணி எதிர்கொள்கிறது. டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூரு, உத்தரப்பிரதேசம் என மொத்தம் 5 அணிகள் விளையாடும் இந்த தொடரில் ஒரு அணி, மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.
— Johns. (@CricCrazyJohns) March 4, 2023
மொத்தம் 22 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. வரும் 26ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில், குஜராத் ஜெயின்ட்ஸ் அணிக்கு பெத் மூனே கேப்டனாக உள்ளார். அதேபோல், மும்பை அணிக்கு ஹர்மன்பிரீத் கௌர், பெங்களூரு அணிக்கு ஸ்மிருதி மந்தனா, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மெக் லான்னிங், உ.பி., வாரியர்ஸ் அணிக்கு அலிசா ஹீலி கேப்டனாக செயல்படுவார்.
மேலும் படிக்க | வார்னே கண்டெடுத்த இந்திய ஆல்ரவுண்டர் இவரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ