Video: டோனியின் பயிற்சி ஆட்டத்தை தடுத்து நிறுத்திய சிறுவன்!

வரும் ஏப்ரல் 7ஆம் நாள் IPL 2018 தொடர் தொடங்குகிறது. இக்கோப்பையினை கைப்பற்ற IPL  அணிகள் அனைத்தும் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர். 

Written by - Mukesh M | Last Updated : Mar 25, 2018, 05:44 PM IST
Video: டோனியின் பயிற்சி ஆட்டத்தை தடுத்து நிறுத்திய சிறுவன்! title=

வரும் ஏப்ரல் 7ஆம் நாள் IPL 2018 தொடர் தொடங்குகிறது. இக்கோப்பையினை கைப்பற்ற IPL  அணிகள் அனைத்தும் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர். 

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு நடைபெறவுள்ள IPL2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்குகிறது.

CSK அணியின் தலைவராக மீண்டும் டோனி சென்னை ரசிகர்களின் ஆசையினை நிறைவேற்ற வருகின்றார். இந்நிலையில் வரும் IPL  போட்டிக்காக அவர் சென்னையில் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் நேற்ற பயிற்சியில் அவர் ஈடுப்பட்ட போது இளம் ரசிகர் ஒருவரின் இடற்பாட்டால் பயிற்சி ஆட்டத்தினை சிறிது நேரம் நிறுத்திக்கொண்டார். மாறாக தன் ரசிகருடன் ஹைபை அடித்து விளையாடினார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில், தல டோனி அச்சிறுவனிடம் விட்டுக்கொடுக்காமல் விளையாடி வருவது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

Trending News