INDvsSA: ’குசும்பு கொஞ்சம் அதிகம்’ அம்பயரிடம் சில்மிஷம் செய்த சாஹல்

பெர்த்தில் மேட்ச் நடைபெறும் மைதானத்தில் தண்ணீர் கொடுக்க சென்ற யுஸ்வேந்திர சாஹல் அம்பயர்களிடம் குசும்பில் ஈடுபட்டுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 30, 2022, 06:46 PM IST
INDvsSA: ’குசும்பு கொஞ்சம் அதிகம்’ அம்பயரிடம் சில்மிஷம் செய்த சாஹல் title=

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 சுற்றுப் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றமாக அக்சர் படேலுக்கு பதிலாக தீபக்ஹூடா சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் போட்டியை பார்த்தவர்களுக்கு, எதற்காக ஹூடாவை சேர்த்தார்கள் என்ற கேள்வி வந்திருக்கும். அந்தளவுக்கு மோசமாக கேட்சாகி வந்த வேகத்தில் வெளியேறினார். இது ஒருபுறம் இருக்க யுஸ்வேந்திர சாஹல் அம்பயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | IND vs SA : 28 ரன்கள் போதும்... விராட் கோலி செய்யப்போகும் சாதனை!

அவர் இந்திய அணிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அதனால், போட்டிக்கு நடுவே வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு கொடுக்கும் வேலைகளை செய்தார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஓவர்களுக்கு இடையில் ஒருமுறை மைதானத்துக்குள் சென்றார். அப்போது, ரோகித்தும், ராகுலும் களத்தில் இருந்தனர். அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க சென்றபோது, களத்தில் இருந்த நடுவர்களிடம் கிச்சு கிச்சு மூட்டி விளையாடியுள்ளார்.

சகஜமாக அவர் பேசி விளையாடிய வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், மேட்ச் எப்படி போனாலும் சாஹலின் குசும்பு மட்டும் குறையவில்லை என கமெண்ட் அடித்துள்ளனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருக்கவில்லை. அவர்கள் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். சூர்யகுமார் மட்டும் நல்ல ஆட்டத்தை விளையாடியதால் இந்திய அணி 133 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்கா - இந்திய மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும்.

மேலும் படிக்க | ICC T20 World cup - IND vs SA : திணறிய இந்தியா... போராடிய சூர்யகுமார்; 134 ரன்கள் இலக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News