தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

Last Updated : Apr 25, 2017, 09:27 AM IST
தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு title=

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதவராக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்பு போராட்டத்தில், அதிமுக, பாஜக, பாமக, தமாகா, தேமுதிக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகிய சங்கங்களும் தங்களது முழு ஆதரவை அளித்துள்ளன. இதனால், அனைத்து கடைகளும் மூடப்படும் என தெரிகிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடைகள், காய்கறி சந்தைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

சென்னையில் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை கிடைக்கும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Trending News