கழிவறைகளை சுத்தம் செய்ய 1000 நவீன வாகனங்கள்- செங்கோட்டையன்!

அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்ய ஜெர்மனி நாட்டில் இருந்து ரோட்டரி சங்கம் சார்பில் 1000 வாகனங்கள் தமிழகம் வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 13, 2018, 11:21 AM IST
கழிவறைகளை சுத்தம் செய்ய 1000 நவீன வாகனங்கள்- செங்கோட்டையன்! title=

அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்ய ஜெர்மனி நாட்டில் இருந்து ரோட்டரி சங்கம் சார்பில் 1000 வாகனங்கள் தமிழகம் வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் வெள்ளாள பாளையம் தொடக்கப் பள்ளியில் இன்று ‘‘ஸ்மார்ட் கிளாஸ்’’ வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் பிரபாகர், கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியயோர் கலந்து கொண்டனர்.

ஆப்போது நிரூபர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்:-

தமிழக கல்வித்துறையில் மாணவ - மாணவிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் இறுதியில் ஜெர்மனி நாட்டில் இருந்து ரோட்டரி சங்கம் சார்பில் 1000 வாகனங்கள் தமிழகம் வருகிறது.

இந்த வாகனங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அங்குள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்யும். முதல் கட்டமாக 20 ஆயிரம் பள்ளி கூடங்களுக்கு இந்த வாகனங்கள் சென்று கழிப்பிட கட்டமைப்பை சுத்தம் செய்யும். முதலில் இந்த சேவையானது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இயக்கப்படும். 

இவ்வாறு கூறினார்.

Trending News