அரசுப் பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர் - கோபத்தில் குதித்த மாணவி உயிரிழப்பு

ஒசூர் அருகே அரசுப் பேருந்தை ஒட்டுநர் நிறுத்தாததால், பேருந்தில் இருந்து குதித்த மாணவி அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழந்தார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 4, 2022, 05:46 PM IST
அரசுப் பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர் - கோபத்தில் குதித்த மாணவி உயிரிழப்பு title=

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த U.சினிகிரிப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் என்பவரது மகள் நவ்யாஸ்ரீ. கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். திங்கட்கிழமை மாலை கெலமங்கலத்திலிருந்து தருமபுரி செல்லக்கூடிய அரசு பேருந்தில் ஏறிய அவர், சினிகிரிப்பள்ளிக்கு பயணித்துள்ளார். 

ALSO READ | Viral Video: அடிபட்ட குரங்குக்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்றும் நபர்

ஆனால் அவர் ஏறிய பேருந்து சினிகிரிப்பள்ளி நிறுத்தத்தில் நிற்காமல் பல மீட்டர்கள் தூரம் சென்றதாக சொல்லப்படுகிறது.  தனது கிராமத்தில் பேருந்து நிற்காததால் மாணவி ஓடும் பேருந்திலிருந்து குதித்துள்ளார். அப்போது, மாணவி உடல் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கியுள்ளது. இதில், படுகாயமடைந்த மாணவியை, அதே பேருந்தில் உத்தனப்பள்ளி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி, மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவி நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது உத்தனப்பள்ளி போலிசார் சாலை விபத்தை ஏற்படுத்தியதற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவயின் இறப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | அதிகாரிகள் அலட்சியம்.. பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற திருநங்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News