#18MLA-கள் வழக்கு: 3-வது நீதிபதி யார் என நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார்!

தகுதிநீக்க வழக்கை விசாரிக்கும் 3 ஆவது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார்! 

Last Updated : Jun 14, 2018, 03:39 PM IST
 #18MLA-கள் வழக்கு: 3-வது நீதிபதி யார் என நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார்! title=

14:09 | 14-06-2018

தகுதிநீக்க வழக்கை விசாரிக்கும் 3 ஆவது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார்!


14:05 | 14-06-2018

3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்.எல்.ஏக்-களின் தகுதி நீக்கம் தொடரும். அதுவரை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், இடைத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை நீடிக்கிறது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


14:00 | 14-06-2018

8 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செல்லும்: 

சபாநாயகர் உத்தரவில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதால் தகுதி நீக்கம் செல்லும். சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது. சபாநாயகரின் முடிவு என்பது உரிய காரணங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம்!


13:52 | 14-06-2018

புதிய அமர்வு தகுதி நீக்க வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை தேர்தல் நடத்தக்கூடாது -சென்னை உயர்நீதிமன்றம்! 


13:44 | 14-06-2018

18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் இருவரும்மாறுப்பட்ட தீர்ப்பு; வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை! 


13:42 | 14-06-2018

நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று இரு வேறு தீர்ப்பு. 


13:41 | 14-06-2018

சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று இந்திரா பானர்ஜி.


13:29 | 14-06-2018

சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 வழக்குகளில் 5 வழக்கு முடிந்த நிலையில் 6 வது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது! 


13:17 | 14-06-2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர், நீதிபதி இந்திரா பானர்ஜி வந்துள்ளனர். 6 வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகே 7வது வழக்காக தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.  


13:11 | 14-06-2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் வந்துள்ளார். 


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று நற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கபடுகிறது! 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். 

இது குறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்ககோரி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான தமிழக கவர்னரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, முதல்வருக்கு எதிராக வாக்களித்தவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கிற்கு நேற்று ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பு வாங்கப்பட்டதாக தினகரன் ஆதரவாளரான தங்கதமிழ்செல்வன் விமர்சித்தார். இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடர வேண்டும் என சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையீட்டார். 

இதையடுத்து, கடந்த ஜனவரி 23-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைத்தார். இந்த நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று  பிற்பகல் 1 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

 

Trending News