இராமநாதபுரத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து: பலி 2; காயம் 21

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுலி அருகே நடைபெற்ற விபத்தில் இருவர் பலி. ஏராளமானோர் காயம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 5, 2019, 09:14 AM IST
இராமநாதபுரத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து: பலி 2; காயம் 21 title=

இன்று அதிகாலை இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுலி அருகே நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

விபத்து சம்பவத்தை அறிந்த போலீசார் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Trending News