புத்தாண்டு போக்குவரத்து மாற்றங்கள்! எந்தெந்த சாலைகளை தவிர்க்கலாம்?

2024 New Year Traffic Changes: புத்தாண்டு வரவுள்ளதையொட்டி, தமிழக காவல்துறை சில போக்குவரத்து மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Dec 28, 2023, 06:37 PM IST
  • புது வருடத்தில் விபத்துக்களை தடுக்க போக்கு வரத்து மாற்றங்கள்.
  • எந்தெந்த சாலைகள் முடக்கம்?
  • சில சாலைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு திறக்கப்படும்.
புத்தாண்டு போக்குவரத்து மாற்றங்கள்! எந்தெந்த சாலைகளை தவிர்க்கலாம்? title=

31.12.2023 அன்று புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மெரினா கடற்கரை. எலியட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள். எனவே, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையானது. "உயிரிழப்பு இல்லா புத்தாண்டிற்கு முன்னாள்" என்ற நோக்கத்துடன் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் சில முடக்கப்பட உள்ளன. அவற்றிற்கு பதிலாக வேறு சில சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளன. அவை என்னென்ன சாலைகள் என்பதை இங்கு பார்ப்போம். 

A. காமராஜர் சாலை மற்றும் எலியாட் கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

1. 0600 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 1900 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேலும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.

2. காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை31.12.2023 2000 மணி முதல் 01.01.2024 0600 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.

3. அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி, ஆர்.ஏ., புரம் 2வது மெயின் ரோடு, ஆர்.கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

4. டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மட் சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.

5. பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

6. வாலாஜா பாயிண்ட், சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில், பாரதி சாலை X விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்), லாயிட்ஸ் சாலை x நடேசன் சாலை மற்றும் நடேசன் சாலை X டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பில் இருந்து காந்தி சிலை வரையில் போக்குவரத்து அனுமதி இல்லை.

மேலும் படிக்க | விஜயகாந்த் அரசியல் வாழ்வின் திருப்பம்... மண்டபம் இடிப்பு - தேமுதிக அலுவலகம் உருவான கதை!

7. தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

8. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து (வடக்கு) ராஜாஜி சாலை மற்றும் வாலாஜா முனையிலிருந்து போர் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் 20:00 மணி முதல் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது.

9. அடையாரிலிந்து பாரிஸ் நோக்கி செல்லும் மாநகர பேருந்துக்கள் அனைத்தும் தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு மந்தவெளி, வி.கே.ஐயர் சாலை, புனித மேரி சாலை, லஸ் சந்திப்பு, இராயப்பேட்டை, கத்திட்ரல் ரோடு அண்ணாசலை வழியாக செல்ல வேண்டிய இலக்கை அடையளாம். 

10. மாநகர பேருந்துக்கள் பாரிஸிலிருந்து அடையார், திருவான்மியூர் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் ஆ.ர்.பி சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு. என்.எப்.எஸ் ரோடு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம், கத்திட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி வழியாக தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம்.

B. காமராஜர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:

1. சுவாமி சிவானந்தா சாலை (தூர்தர்ஷன் கேந்திரத்திலிருந்து பெரியார் சிலை வரை ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

2. வாலாஜா சாலை (தமிழ்நாடு மாநில விருந்தினர் மாளிகை அருகே அண்ணா சிலையை நோக்கி - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

3. பாரதி சாலை (விக்டோரியா ஹோட்டல் சாலை X பாரதி சாலை சந்திப்பில் ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

4. பொதுப்பணித்துறை அலுவலகச் சாலை.

5. டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகே ஐஸ் ஹவுஸ் நோக்கி- ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

6. லாயிட்ஸ் சாலை (நடேசன் சாலையை நோக்கி மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அலுவலகம் அருகில் இருந்து - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

7. இராணி மேரி கல்லூரி வளாகம்.

C. எலியாட் கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

1. 31.12.2023 அன்று 2000 மணி நேரத்திற்குப் பிறகு 6வது அவென்யூ நோக்கி 01.01.2024 அன்று 0600 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

2. 6வது அவென்யூ 5வது அவென்யூ சந்திப்பு, 4வது மெயின் ரோடு சந்திப்பு. 3வது மெயின் ரோடு சந்திப்பு, 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்ஜி ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்.

மேலும் படிக்க | விஜயகாந்த் அரசியலில் சறுக்க யார் காரணம்? தேமுதிக என்ன ஆகும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News