கோவையில் காட்டு யானை தாக்கியதில் 4 பேர் பலி

Last Updated : Jun 2, 2017, 09:24 AM IST
கோவையில் காட்டு யானை தாக்கியதில் 4 பேர் பலி title=

கோவை அருகே போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் காட்டு யானை கோபத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

கோவை புதூர், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன. இந்த வனப்பகுதிக்கு சென்ற பழனிச்சாமி யானை தாக்கி உயிரிழந்தார்.

மேலும் ஜோதிமணி, நாகரத்தினம் ஆகியோர் யானை தாக்கி பலியாகினர். கணேசபுரத்தை சேர்ந்த விஜயகுமாரும், காயத்ரியை நேற்று இரவு காட்டு யானை தாக்கியது. காயத்ரி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து விஜயகுமாரை தூக்கி வீசியது. அவர் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையடுத்து கட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தொடர் பலி காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

Trending News