சென்னை: தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு இன்றுடன் நிறைவடைந்தது. இந்த தொகுதிகளுக்கு அடுத்த மாதம் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தொகுதிகளில் போட்டியிட திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி தயாராகி வருகிறது. யாரை வேட்பாளர்களை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றன அரசியல் கட்சிகள்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி, நாங்குநேரி தொகுதி மற்றும் புதுவை மாநிலத்தில் இருக்கும் காமராஜ் நகர் தொகுதி ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வரும் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. மேலும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 64 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30 ஆம் தேதி. வேட்பு மனுக்களை திரும்பப்பெறும் நாள் அக்டோபர் 3 ஆம் தேதி ஆகும். தேர்தல் வாக்குகள் அக்டோபர் 24 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தள்ளது.
தமிழகம் மற்றும் புதுசேரியில் நடைபெற இடைத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர் காணல் மற்றும் விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு இன்றுடன் நிறைவடைந்தது. அதாவது 90 பேர் விருப்பமனு பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல புதுவை மாநிலத்தில் இருக்கும் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட 5 பேர் விருப்பமனு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.