நடிகை விஜயலட்சுமி புகார்: ஹரிநாடாருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்..!

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் ஹரிநாடாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 20, 2022, 06:21 PM IST
  • நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கு
  • பெங்களுரு சிறையில் இருந்த ஹரிநாடார் கைது
  • 15 நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
நடிகை விஜயலட்சுமி புகார்: ஹரிநாடாருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்..! title=

பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை விஜயலட்சுமி, அந்தப் படத்துக்குப் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். பின்னர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக கூறி தொடர்ச்சியாக சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். காவல்நிலையத்திலும் இது குறித்து புகார் அளித்ததாக தெரிவித்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்களின் தொந்தரவை தன்னால் தாங்க முடியவில்லை எனக் கூறி கடந்த ஆண்டு அளவுக்கதிமாக தூக்கமாத்திரைகளை எடுத்துக் கொண்டார்.

ALSO READ | 'மகனையும், மருமகளையும் சேர்த்து வையுங்கள்' சூப்பர்ஸ்டாருக்கு சர்ச்சை தம்பதியின் கோரிக்கை 

பின்னர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சசைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார். அப்போது, சீமானுக்காக தன்னை ஹரிநாடார் மிரட்டுவதாக வீடியோ ஒன்றில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மற்றும் ஹரிநாடாரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்த புகார் திருவான்மியூர் காவல்நிலையத்தில் நிலுவையில் இருந்தது.

ALSO READ | 'Me Too' லீலா மணிமேகலை, சின்மயிக்கு நீதிமன்றம் விதித்த தடை

இந்நிலையில், இந்தப் புகாரை தூசி தட்டி எடுத்துள்ள காவல்துறையினர், விஜயலட்சுமி தற்கொலை முயற்சி புகாரில் ஏற்கனவே பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ஹரி நாடாரை கைது செய்துள்ளனர். லோன் வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறி ஹரிநாடார் கைது செய்யப்பட்டு பெங்களுரு பரப்பன அஹ்ரகார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், விஜயலட்சுமி புகாரில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்ட ஹரி நாடாரை, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News