அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி ஒதுக்கீடு

தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 26, 2019, 07:01 PM IST
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி ஒதுக்கீடு title=

சென்னை: தமிழகத்தில் நாங்குநேரி (Nanguneri), விக்கிரவாண்டி (Vikravandi) மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) இடைத்தேர்தல் (ByElections) நடைபெற உள்ளது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியை பொறுத்த வரை தமிழகத்தின் இரண்டு தொகுதியிலும் அக்கட்சியே போட்டியிடுகிறது. புதுச்சேரியில் அதன் கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையின் போது தமிழக முதல்வர் (Edappadi Palanisamy), துணை முதல்வர் (O Panneerselvam) மற்றும் புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி (N. Rangaswamy) முன்னிலையில் போடப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த என்ஆர்காங்கிரஸ் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த இடைத்தேர்தலில் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று ஏற்கனவே அக்கட்சிகள் அறிவித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதேபோல நாம் தமிழர் கட்சியும் 3 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இன்று அல்லது நாளை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் கடநந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30 ஆம் தேதி. வேட்பு மனுக்களை திரும்பப்பெறும் நாள் அக்டோபர் 3 ஆம் தேதி ஆகும். தேர்தல் வாக்குகள் அக்டோபர் 24 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தள்ளது.

Trending News