AIADMK மாநிலங்களவை எம்.பி. முகமது ஜான் மாரடைப்பால் மரணம்

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழகத்தின் சார்பில் தற்போது மாநிலங்களவை பிரதிநிதியாக இருந்த ஒரே ஒரு இஸ்லாமியர் முகமது ஜான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 23, 2021, 07:31 PM IST
  • மாநிலங்களவை எம்.பி. முகமது ஜான் மாரடைப்பால் மரணம்
  • அதிமுகவின் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது ஜான்
  • தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் முகமது ஜான்
AIADMK மாநிலங்களவை எம்.பி. முகமது ஜான் மாரடைப்பால் மரணம் title=

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழகத்தின் சார்பில் தற்போது மாநிலங்களவை பிரதிநிதியாக இருந்த ஒரே ஒரு இஸ்லாமியர் முகமது ஜான் என்பது குறிப்பிடத்தக்கது. 

முகமது ஜான் 2011-16 ஆம் ஆண்டில் தமிழக சட்டசபையில் ராணிபேட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார். பின்தங்கியோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை பிற்படுத்தப்பட்ட, மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் எம்.பி முகமது ஜான்.

2016 சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டைத் தொகுதியில் போட்டியிட்ட போது, திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். பிறகு 2019ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக முகமது ஜானை தேர்ந்தெடுத்தது.  

Also Read | வரி ஏய்ப்பு செய்தார் உதயநிதி ஸ்டாலின்; தேர்தல் ஆணையத்தில் AIADMK புகார்

தற்போது தமிழக தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அவர், ராணிப்பேட்டையில் இருந்தார். ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தீவிர மாராடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News