ஜெ., மரணம்: தமிழக அரசுக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், தமிழக அரசிடம் அறிக்கை ஒன்று வழங்கியுள்ளனர். 

Last Updated : Mar 6, 2017, 03:10 PM IST
ஜெ., மரணம்: தமிழக அரசுக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை title=

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், தமிழக அரசிடம் அறிக்கை ஒன்று வழங்கியுள்ளனர். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பன்னீர்செல்வத்தை தொடர்ந்து பலரும் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். ஜெயலலிதா மரணம் மர்மம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் குழுவினரிடம் அறிக்கை தருமாறு தமிழக அரசு கேட்டிருந்தது. இதனையடுத்து இந்த அறிக்கை வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. 

தமிழக சுகாதார துறை செயலாளர் இந்த அறிக்கையை பெற்றுக்கொண்டார். 5 சிறப்பு டாக்டர்கள் குழுவினர் இதில், தங்களின் சிகிச்சை தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

இந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பது குறித்து இதனை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என தெரிகிறது.

Trending News