பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு; சென்னைவாசிகள் அடைந்த நன்மை என்ன?

தீபாவளி திருநாளான இன்று சென்னையில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

Last Updated : Nov 6, 2018, 05:44 PM IST
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு; சென்னைவாசிகள் அடைந்த நன்மை என்ன? title=

தீபாவளி திருநாளான இன்று சென்னையில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக தீபாவளி தினத்தன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால், தமிழக அரசு இன்று  காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் பட்டாசு கனிசமாக குறைந்தது. கிட்டத்தட்ட 75% பட்டாசுகள் விற்பனையாகமல் கடைகளிலேயே தங்கின. இதன் காரணமாக தீபாவளி தினமான இன்று காற்று மாசு கடந்தாண்ட்டை விட குறைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

சென்னையில், காற்று மாசு 65 குறியீடாக பதிவாகி இருப்பதாகவும், டெல்லியில் சராசரி காற்று மாசு 349 குறியீடாக பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியை பொருத்தமட்டில் அபாய நிலையினை எட்டியுள்ள காற்று மாசு, சென்னையில் சாதாரண அளவில் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அண்டை மாநிலங்களான கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காற்று மாசு  குறியீடு 87 ஆக உள்ளது. பிற மாநிலங்களை விட சென்னையில் காற்று மாசு குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News