ஏர்செல் மேக்சிஸ் வழக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு முடிவு

Last Updated : Feb 3, 2017, 10:01 AM IST
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு முடிவு title=

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.மேலும் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நேற்று இந்த வழக்கு குறித்த தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஷைனி  கூறியதாவது: சி.பி.ஐ தொடர்ந்துள்ள குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த வழக்கிலிருந்து அனைவரையும் எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்கிறேன் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்த ஆலோசனையில் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளதாகவும் தகவலகள் வெளியாகியுள்ளன.

Trending News