மே 23-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி

மே 23 ஆம் தேதி அன்று, காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை தமிழகத்தில் இயங்காது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 21, 2019, 03:25 PM IST
மே 23-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி title=

சென்னை: கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற 2019 மக்களவை தேர்தல் தேர்தல் மே 19 ஆம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுயை தவிர மற்ற 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 ஆம் நாள் நடைப்பெற்றது. அன்றே 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. மேலும் கடந்த மே 19 ஆம் தேதி மீதமுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. 

நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒரிசா உட்பட சில மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (மே 23) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இந்தநிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், மே 23 ஆம் தேதி அன்று, காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

Trending News