மிக்ஜாம் புயல் பாதிப்பையொட்டி சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. பால், பிஸ்கட் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு கூட வெளியில் சென்று வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆவின் சார்பில் பால் விநியோகம் முறையாக நடைபெற்று வரும்போதும் சாலைகளில் தேங்கியிருக்கும் பெருமளவு தண்ணீர் மற்றும் கடைகள் திறக்கப்படாமை ஆகியவை மக்களை பெரும் சிரமத்துக்குள்ளாக்கியிருக்கிறது. இப்படியான சூழலில் உதவி தேவைப்படும் மக்கள் உடனடியாக தங்களால் இயன்றளவு அரசு மூலம் உதவி பெற முயற்சிக்கின்றனர். குறிப்பாக எக்ஸ் தளத்தில் அமைச்சர்களை நேரடியாக டேக் செய்து உதவி வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
அந்தவகையில் சக்திகுரு ராதாகிருஷ்ணன் என்ற X தளத்தின் பயனர் ஒருவர், சென்னை பெரம்பூர், ஜாமாலியா பகுதியில் காரின் உள்ளே சிலர் சிக்கிக்கொண்டதாக பதிவிட்டிருந்தார். அதாவது, கார் உள்ளேயும் மழை நீர் புகுந்ததை தொடர்ந்து, காரின் கதவை திறக்க முடியாமல் திணறியுள்ளனர். அந்த நபர்களுக்கு உதவி வேண்டி அவர் பதிவிட்ட அந்த பதிவில் தொடர்பு எண்ணையும் கொடுத்து அவர்களை உதவும்படி கூறியிருந்தார். அந்த பதிவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் காவல்துறை அதிகாரிகளையும் அவர் டேக் செய்திருந்தார். மேலும், அவரின் இருப்பிடம் குறித்து தகவல்களையும் பகிர்ந்தார்.
காலை 11.13 மணிக்கு அவர் இதனை பதிவிட்டிருந்த நிலையில், காலை 11.46இல் அவர் பத்திரமாக மீட்கப்பட்டதாக பதிவிட்டிருந்தார். சரியான நேரத்தில் உதவியதற்கு நன்றி. நாங்கள் ஜமாலியாவில் இருந்து SPR CITY நுழைவாயிலுக்கு வந்துவிட்டோம். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், பேட்டரியுடன் காரை ஸ்டார்ட் செய்ய சில மெக்கானிக்கைத் தேடி வருகிறோம்" என பதிவிட்டிருந்தார். தமிழ்நாடு காவல்துறை அதன் X பக்கத்தில்,"அவர் பத்திரமான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார்" என தெரிவித்தது. அதற்கும், பாதிக்கப்பட்ட அந்த நபர் நன்றி தெரிவித்திருந்தார். வெறும் அரைமணி நேரத்தில் அவர்களை போலீசார் காப்பாற்றியது சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இதேபோல் பார்த்தசாரதி புறத்தில் இளம் தாய் ஒருவர் 5 மாத குழந்தைக்கு பால் பவுடர் தேவைப்படுவதை, எக்ஸ் தளத்தில் யுவராணி என்ற பயனர் பகிர்ந்தார். அவருக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா உடனடியாக உதவி செய்வதாக உறுதி அளித்ததுடன் பால் பவுடர் தேவைப்பட்ட தாய் சேய்க்கு சென்று சேருவதையும் உறுதி செய்தார். இதன்பிறகு உதவி கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பெண் அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்தார்.
மேலும் படிக்க | சென்னை புயலில் மனிதர்கள் உள்ளே! முதலைகள் வெளியே... மிக்ஜாம் சூறாவளி வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ