அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக  உறுதியாக இணையும் என கூறப்பட்ட நிலையில், அதில் உண்மையில்லை என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 26, 2024, 07:53 PM IST
  • பாமகவின் தேர்தல் வியூகம்
  • எந்த கூட்டணியில் பாமக?
  • அன்புமணி ராமதாஸின் முடிவு
அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட் title=

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் தமிழ்நாடு அரசியல் களம் விறுவிறுப்பாக உள்ளது. திமுக கூட்டணி இப்போது ஒருபடி முன்னால் நிற்கிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொமதே கட்சிக்கு ராமநாதபுரம், நாமக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணியை இறுதி செய்வதில் திமுக கூட்டணியில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த கட்சிகள் கூடுதல் சீட் கேட்பதாலும், குறைந்தபட்சம் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளையாவது கொடுக்க வேண்டும் என கூறுவதும் இழுபறிக்கு காரணம். 

மேலும் படிக்க | 'கலைஞர் என்றாலே போராட்டம்தான்...' மெரினாவில் நினைவிடம் திறப்பு... கருப்பு சட்டையில் ரஜினி!

இதுஒருபுறம் இருக்க அதிமுக கூட்டணியும் இதுவரை இறுதி செய்யப்படவில்லை. பாமக, தேமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என அதிமுக திட்டம் போட்டாலும், அந்த இரு கட்சிகளும் இதுவரை எந்த பிடியும் கொடுக்காமல் அமைதி காத்து வருகின்றன. குறிப்பாக பாமக வந்தால்கூட போதும் என்ற நிலையில் இப்போது அதிமுக இருக்கிறது. அக்கட்சி கேட்கும் தொகுதிகளை கொடுத்து நேரடியாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கலாம் என நினைக்கிறது. பாமக மாநிலங்களவை சீட் உறுதியை எதிர்பார்க்கிறது. எதிர்க்கட்சியாக இருப்பதால் அந்த உறுதியை கொடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் அதிமுக இருப்பதால், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.

பாஜக மாநிலங்களவை சீட் கொடுப்பதாக உறுதியளிக்கும்பட்சத்தில் அங்கு செல்லவும் தயாராக இருக்கிறது பாமக. இது குறித்து அன்புமணி ராமதாஸ் பேசுகையில் யாருடனும் இதுவரை அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என கூறியுள்ளார். யூகங்களின் அடிப்படையில் வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என கடலூரில் இப்போது கூறியுள்ளார். அதாவது அதிமுக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 தொகுதிகளில் போட்டியிடும் என கூறப்பட்டுள்ள நிலையில் இந்த மறுப்பை தெரிவித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

கூட்டணியை உறுதி செய்வதில் எந்த அவசரமும் இல்லை என தெரிவித்திருக்கும் அவர், இன்னும் ஓரிரு வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கு பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது பாஜகவின் நகர்வு எப்படி இருக்கிறது?, தேசிய அளவில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கும் கிடைக்கும் ஆதரவு என எல்லாவற்றையும் பார்த்துவிட்டு பிறகு கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கலாம் என்ற நினைப்பில் இருக்கிறாராம் அன்புமணி. இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அதிகமாகிறது என உறுதியாக தெரியும்பட்சத்தில் திமுக கூட்டணியில் கூட இணைய தயாராக இருக்கிறதாம் பாமக. அதற்காகவே ஓரீரு வாரங்களுக்கு கூட்டணி குறித்த அறிவிப்பை தள்ளியும் போட்டுள்ளார்களாம். களநிலவரத்தின் அடிப்படையில் கூட்டணியை உறுதி செய்ய திட்டமிட்டிருக்கிறது பாமக என்பது தான் இப்போதை லேட்டஸ்ட் தகவல். 

மேலும் படிக்க | பாலாற்றில் புதிய தடுப்பணை: ஆந்திராவிடம் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா? - ராமதாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News