மேகதாது விவகாரம்: 'கண்டனம் வரவில்லை... உரிமைகளை விட்டுக்கொடுக்கும் ஸ்டாலின்' - அண்ணாமலை

Mekadatu Dam Issue Annamalai: மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறியதற்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து இதுவரை கண்டனம் வரவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 1, 2023, 04:55 PM IST
  • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தது போன்ற அமலாக்கத்துறை தற்போது கிடையாது - அண்ணாமலை
  • திமுக அமைச்சர்கள் புழுவை விட மதிக்க தகுதியற்றவர்கள் - அண்ணாமலை
  • மாநிலத்தின் உரிமைகளை தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறார் ஸ்டாலின் - அண்ணாமலை
மேகதாது விவகாரம்: 'கண்டனம் வரவில்லை... உரிமைகளை விட்டுக்கொடுக்கும் ஸ்டாலின்' - அண்ணாமலை title=

Mekadatu Dam Issue Annamalai: தூத்துக்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசி அவர்,"தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, திமுக ஒன்றிய செயலாளர் கையில் உள்ளது. காவல்துறை கையில் இல்லை. மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அதிகாரிகள் மத்தியில் கூறியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து இதுவரை கண்டனம் வரவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலத்தின் உரிமைகளை தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறார்

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கையை கண்டு முதலமைச்சர் பயப்படுகிறார்.அவரது குடும்பத்திற்கு ஊழலில் தொடர்பு உள்ளது. தற்போதுள்ள அமலாக்கத்துறை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தது போன்ற அமலாக்கத்துறை கிடையாது. தவறு செய்தவர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும். இதை பொதுமக்கள், நமது சகோதரர்கள் என அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

மேலும் படிக்க | 'அண்ணாமலை சொல்றத நம்பாதீங்க.. அத்தனையும் பொய்' - எஸ்வி சேகர்

மேகதாது அணை கட்ட முயற்சி செய்தால் நாங்கள் தடுத்து நிறுத்துவோம். நடைபயணமாக சென்று தடுத்து நிறுத்துவோம். தமிழ்நாடு மக்கள் இதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆதி திராவிடர் நலனுக்காக அவர்களின் நலனை உயர்த்த தமிழ்நாடு அரசு எவ்வித திட்டமும் செயல்படுத்தவில்லை. இதன் காரணமாக மத்திய அரசு அளிக்கும் நிதிகள் திரும்ப சென்று கொண்டிருக்கிறது. இது வருத்தப்பட வேண்டிய விஷயம்
  
தமிழ்நாடு அமைச்சர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள், ஊரைக் கொள்ளை அடிப்பது, இடத்தை கொள்ளை அடிப்பது, அரசியல் எதிரிகளை பழிவாங்குவது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அமைச்சர்கள் புழுவை விட மதிக்க தகுதியற்றவர்கள். தமிழகத்தில் உள்ள திமுக அமைச்சர்கள் மனிதர்களாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள். தற்போது எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை புறக்கணித்து இருப்பது 2024 தேர்தலிலும் அவர்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே செல்வார்கள் என்பதை காட்டுகிறது" என்றார். 

முன்னதாக, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மேகதாதுவில் அணை கட்டுவதாக அறிவித்தது தமிழ்நாட்டில் பெருமளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் ரகுபதி, முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும், மேகதாது அணை விவகாரத்தில் அதன் கட்டுமானத்தை தடுத்து நிறுத்துவோம் என்று துரைமுருகன் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துவிட்டார் என முதலமைச்சர் ஸ்டாலினும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு திரும்புகையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | மேகதாது பிரச்சனை: திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது - எடப்பாடி பழனிசாமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News