'தமிழ்நாட்டில் ராணுவ வீரரையே மிரட்டுகின்றனர்...' - சட்ட ஒழுங்கு குறித்து அண்ணாமலை

பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒரு ராணுவ வீரரையே மிரட்டும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 28, 2022, 09:13 AM IST
  • தமிழ்நாட்டில் 5000 இடங்களில் பாஜக போராட்டம் நடத்த திட்டம்.
  • மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அண்ணாமலை திட்டம்
'தமிழ்நாட்டில் ராணுவ வீரரையே மிரட்டுகின்றனர்...' - சட்ட ஒழுங்கு குறித்து அண்ணாமலை title=

அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு, அதனை நாடு முழுவதும் பரப்பும் வகையில் 12 பைக் பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணித்து தமிழகம் திரும்பியதை கொண்டாடும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் நேற்று (நவ. 27) நடைபெற்றது. இந்த பயணத்தில், 15 நாட்களில் 6000 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து 10 லட்சம் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை எடுத்துக் கூறியதை கொண்டாடும் விழா நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம், வேல்ஸ் குழுமத்தின் தலைவர் ஐசரி கணேஷ், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://zeenews.india.com//tamil/topics/Annamalai

இந்நிகழ்ச்சியின் மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,"16 நாள் பயணமாக இங்கு இருந்து, 9 மாநிலங்கள் வழியாக 6000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, டெல்லி வரை சென்று வந்துள்ளார்கள், இந்தியா அரசியல் அமைப்பு சட்டத்தை இந்திய முழுவதும் கொண்டு சென்றுள்ளார்கள். இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளில் அரசியல் அமைப்பு சட்டம் வகுப்பு  இருக்கிறதா? 

மேலும் படிக்க | உதயநிதி நடந்தால் ஊர்வலம்; உட்கார்ந்தால் பொதுக்கூட்டம் - திமுக அமைச்சர்!

நம் நாட்டில்  அரசியல் அமைப்பு சட்டம் தெரியுமா என்று கேட்டால் அதற்க்கு பதில் தெரியாது என்பதே அதிகம் சொல்வார்கள். மோடி இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்ற உடன் நவம்பர் 26ஆம் தேதி அரசியல் அமைப்பு சட்டம் நாள் என்று கொண்டுவந்தார். 

1949ஆம் ஆண்டு கொடுத்து, 1950 அரசியல் சாசனமாக கொண்டு வரப்பட்டது. நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு சட்டம் தினம் என்று இதுவரை இந்தியாவில் பிரதமராக இருந்தவர்கள் ஒருநாள் கூட யோசிக்கவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய மக்களுக்கு சுயமாக நிர்வகிக்க முடியாது என்று பிரிட்டனில் வின்ஸ்டன் சர்ச்சில் பேசினார்.

ஆனால் இன்றோ அதே பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். பொய்யும் புரட்டும் பேசி எத்தனை ஆண்டு காலம் நம்மை ஆள்வார்கள் என்பது இந்த அரசியல் அமைப்பு சட்டம் படித்துவிட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள். அதன் மூலம் அரசியல் மாற்றம் வரும்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை,"தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் தேச விரோதமாக பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். முதல் முறையாக பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒரு ராணுவ வீரரை அதுவும் ஹிமாச்சல் பிரதேசத்தில், சிஆர்பிஎஃப் வீரரை - மிரட்டும் வகையில் உங்களது குடும்பம் இங்கே தானே இருக்கிறது என்பதை போன்று பேசியிருக்கிறார்கள். 

அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு இங்கே இருக்கிறது. ஏனென்றால் நாம் ஆளுங்கட்சியில் தான் இருக்கிறோம் என்ற தைரியத்தில் அவர்கள் அப்படி செய்கிறார்கள். அதனால்தான் அந்த ராணுவ வீரரின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவரிடம் பேசினேன்.

ஆர்எஸ் பாரதி போன்றோரின் வேலை அறிவாலயத்தின் வாசலில் அறந்து பிச்சை எடுப்பதுதான். கோபாலபுரம் குடும்பம் தங்களுக்கு பிச்சை போடுவார்கள் என்று காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக ஆர்எஸ் பாரதி போன்ற 3 பேர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

'கிராமம் கிராமமாக செல்ல உள்ளேன்'

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அதற்கான திட்டமிடல்கள் செய்யப்பட்டு வருகிறோம். சுற்றுப்பயணம் என்று சொல்வதை விட அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்க உள்ளேன்.  தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும். முடித்தால் கிராமம் கிராமமாக செல்ல வேண்டும். ஒரு வருடம் முழுவதுமாக இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம், விரைவில் இதுகுறித்து அறிவிக்கப்படும். 

தமிழகம் முழுவதும் 1200 இடங்களில் பாஜகவின் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அடுத்த முறை தமிழக அரசுக்கு எதிராக 5000 இடங்களிலும் போராட்டம் நடந்த வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம்" என்றார்.

மேலும் படிக்க | உணவு டெலிவரிக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டம்... சென்னையில் தொடக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News