கொரோனா பரவாமல் இருக்க சுத்தம் சுகாதாரமாக இருங்கள்! அறிவுரை கூறிய மத்திய அமைச்சர்

Atal Bihari Vajpayee Birthday In Madurai: கொரானா மீண்டும் நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அமைச்சர் வேண்டுகோள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 24, 2022, 01:15 PM IST
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாயி பிறந்த நாள்
  • கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனுசரிக்கப்பட்ட முன்னாள் பிரதமரின் பிறந்தநாள்
  • ஊடகவியலாளர்களுக்கு முகக்கவசம் வழங்கிய மத்திய அமைச்சர்
கொரோனா பரவாமல் இருக்க சுத்தம் சுகாதாரமாக இருங்கள்! அறிவுரை கூறிய மத்திய அமைச்சர் title=

மதுரை: கொரானா மீண்டும் நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள உழவர்சந்தை அருகில் மதுரை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகளை அகற்றி தூய்மை பணியை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி துவக்கி வைத்தார்.

துடைப்பம் மூலம் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி, அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தார். 

மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்னதாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய அமைச்சர் கிசன்ரெட்டிக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் கிசன்ரெட்டி, கொரோனா தொற்றுநோய், மீண்டும் நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளது என்று தனது கவலைகளைப் பகிர்ந்துக் கொண்டார். கொரோனா பரவலைத் தவிர்க்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க | புதிய வகை கொரோனா - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்

பிரதமர் கூறியது போல கொரானா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி, தூய்மை இந்தியாவின் இந்த தூய்மைப் பணித் திட்டம் வெற்றியடைய மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

கொரோனா பரவும் நிலையில், பொதுவெளியில் அதிகம் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள முன்களப்பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி, ஊடகவியலாளர்களுக்கு முகக்கவசங்களை அமைச்சர் வழங்கினார்.

மதுரையில் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி, அங்கிருந்து ராமேஸ்வரம் சென்றார்.

மேலும் படிக்க | COVID Horror: விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா அலை! புத்தாண்டை பதம் பார்க்கும் கோவிட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News