திமுக-வின் ஊதுகுழல் என கமல்ஹாசனை விமர்சித்த எச்.ராஜா!!

Last Updated : Aug 13, 2017, 11:11 AM IST
திமுக-வின் ஊதுகுழல் என கமல்ஹாசனை விமர்சித்த எச்.ராஜா!! title=

பாராதிய ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் கமல்ஹாசனை விமர்சித்து உள்ளார்.

சென்னை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட எச்.ராஜா கமல்ஹாசன் பற்றி கூறியதாவது:-

விஸ்வரூபம் பட பிரச்சினையில் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொல்லும் அளவுக்கு கோழைத்தனமாக செயல்பட்டார். தற்போது முரசொலி பவள விழாவில் பங்கேற்றதன் மூலம் தான் ஒரு திமுக-வின் கைக்கூலி, ஊதுகுழல் என்பதை நிரூபித்து இருக்கிறார் என எச்.ராஜா கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பலர் கமல்ஹாசனை விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News