ப்ளூ வேல் சேலஞ்ச் கேம்: விருதுநகர் மாணவர் தற்கொலை முயற்சி

Last Updated: Thursday, October 12, 2017 - 18:55
ப்ளூ வேல் சேலஞ்ச் கேம்: விருதுநகர் மாணவர் தற்கொலை முயற்சி

உலக முழுவதும் அச்சத்தை கிளப்பி வரும் நீலத் திமிங்கிலம் எனச் சொல்லப்படும் ப்ளூ வேல் விளையாட்டுக்கு மேலும் ஒரு இளைஞர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ஜெகதீஷ் என்ற 18 வயது இளைஞன் தொடர்ந்து ப்ளூ வேல் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்துள்ளான். ஒரு கட்டத்தில் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த பெற்றோர், காயம் அடைந்த மகனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இந்த விளையாட்டு பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைக் பறித்துள்ளது. கடந்த சில நாட்களாக பல உயிர்களை பறித்துள்ள மிகவும் ஆபத்தான 'ப்ளூ வேல் சேலஞ்ச்' என்ற 'ஆன்லைன்' விளையாட்டு பல்வேறு இணையத்தளத்தில் பரவி வரும் நிலையில் இந்த விளையாட்டை நிறுத்தும்படி 'கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம், மைக்ரோசாப்ட், யாகூ' போன்ற இணையதள மற்றும் சமூகவலைதள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.