Thangar Bachan: பாமக வேட்பாளர்கள் பட்டியல்-கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டி!

Lok Sabha Election 2024 Thangar Bachan In Cuddalore Constituency : மக்களவை தேர்தல் 2024 நடைபெற உள்ளதை ஒட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் களம் காண உள்ள வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Yuvashree | Last Updated : Mar 22, 2024, 10:53 AM IST
  • நாடாளுமன்ற தேர்தல் 2024 அப்டேட்
  • பாமக சார்பில் தங்கர் பச்சான் போட்டி!
  • கடலூர் தொகுதியில் நிற்கிறார்..
Thangar Bachan: பாமக வேட்பாளர்கள் பட்டியல்-கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டி! title=

Lok Sabha Election 2024 Thangar Bachan In Cuddalore Constituency : மக்களவை தேர்தல் 2024 நடைபெற உள்ளதை ஒட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் களம் காண உள்ள வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான தங்கர் பச்சான், பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 

மக்களவை தேர்தல் 2024:

மக்களவை தேர்தல் 2024, வரும் ஏப்ரல் மாதம்19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை முன்னரே அறிவித்திருந்தது. இதையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது குறித்து விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டி?

பாமக வேட்பாளர்கள் பட்டியல்:

1.திண்டுகல் தொகுதியில் கவிஞர் ம.திலகபாமா போட்டியிடுகிறார்
2.அரக்கோணம் தொகுதியில் வழக்கறிஞர் கே.பாலு போட்டி
3.ஆரணி தொகுதியில் பாமக மாவட்டச் செயலாலர் அ.கணேஷ் குமார் போட்டி
4.கடலூர் தொகுதியில் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் போட்டி
5.மயிலாடுதுறையில் ம.க.ஸ்டாலின் போட்டி
6.கள்ளக்குறிச்சி தொகுதியில் இரா.தேவதாஸ் போட்டி
7.தருமபுரி தொகுதியில் பா.ம.க முன்னாள் மாவட்ட செயலாளர் அரசாங்கம் போட்டி
8.சேலம் தொகுதியில் ந.அண்ணாதுரை போட்டி
9.விழுப்புரம் தொகுதியில் முரளி சங்கர் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி அல்லது சௌமியா அன்புமணி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் இருவருமே போட்டியிடவில்லை.  அதேபோல பாமகவின் முக்கிய நிர்வாகிகள் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மூர்த்தியும் போட்டியிடவில்லை. 

மேலும் படிக்க | 16 வேட்பாளர்களை அறிவித்த அதிமுக... புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு - இபிஎஸ் பிளான் என்ன?

பொதுமக்கள் விமர்சனம்:

தங்கர் பச்சான், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட உள்ளதை தொடர்ந்து, பொதுமக்கள் பலர் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் தங்கர் பச்சானை விமர்சனம் செய்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி, குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களை வைத்து அரசியல் செய்வதாக மக்களிடையே ஒரு கருத்து உள்ளது. எனவே, அவர்கள் தங்களின் வேட்பாளர்களையும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக தேர்ந்தெடுத்து தேர்தலில் களமிறக்குவதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. இதுவரை, எந்தவித சாதிய கொள்கைகளுக்காகவும் நிற்காத தங்கர் பச்சான், தற்போது பாமக கட்சியில் வேட்பாளராக களமிறங்க உள்ளதுதான் இந்த விமர்சனத்திற்கு தற்போது காரணமாகியுள்ளது. 

மேலும் படிக்க | Lok Sabha Election 2024 : திமுகவில் 50 சதவீதம் புதுமுக வேட்பாளர்கள்! யார் எந்த தொகுதியில் போட்டி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News