பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த இவர், வழக்கம்போல் கட்சி நிர்வாகிகளுடன் தன் வீட்டருகில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்ததுடன், அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய வந்தவர்களை தடுத்த இருவருக்கும் அரிவாளால் வெட்டு விழுந்துள்ளது.
அரிவாள் வெட்டு சரிமாரியாக விழுந்தவுடன் அப்பகுதி மக்கள் உடனடியாக ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங் உடலை எடுத்துச் சென்றனர். அங்கு அவரது உடலை அவசர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் சென்று மருத்துவர்கள் பரிசோதித்தபோது, ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்த தகவல் பெரம்பூர் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. திரைப்பட நடிகர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்தி கேட்டதும் பெரம்பூர் பகுதிக்கு நேரடியாக வந்தார். அரசியல் கட்சி நிர்வாகிகளும் அங்கு சென்று கொண்டிருப்பதால் அப்பகுதியே பெரும் பதற்றத்துடன் இருக்கிறது. முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கொலையான ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும் நிலையில், சட்ட ஒழங்கு சீர்கேட்டுக்கு தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் இரங்கல் செய்தியில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன். ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி.
மாயாவதி அவர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ