மத்திய, மாநில ஆட்சி மோசமான நிலையில் நடைபெறுகிறது: ஸ்டாலின்

கொளுத்தும் வெயிலைக் காட்டிலும் மத்தியிலும் மாநிலத்திலும் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின்!!

Last Updated : Apr 14, 2019, 12:06 PM IST
மத்திய, மாநில ஆட்சி மோசமான நிலையில் நடைபெறுகிறது: ஸ்டாலின் title=

கொளுத்தும் வெயிலைக் காட்டிலும் மத்தியிலும் மாநிலத்திலும் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின்!!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் இருபெரும் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டும் போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்தும், சுற்றுப்பகுதிகளில் உள்ள சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் பிரச்சாரத்தில் பேசிய அவர் கூறியதாவது, "தற்போது கோடைக்காலத்தை முன்னிட்டு, சென்னை உள்படதமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் கொளுத்துகிறது. ஆனால், அடிக்கும் வெயிலைக் காட்டிலும் மாநிலத்திலும், மத்தியிலும் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மோசமான ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். தமிழகத்தில் வருகிற 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக ஜெயித்து விட்டால் 117 சட்டமன்ற தொகுதிகளை பெற்று திமுக ஆட்சியை பிடித்து விடும்" என்றார். 

கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆட்சியால் பல்வேறு கொடுமைகளை மக்கள் சகித்துக்கொண்டு இருக்கக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். அப்படி இருக்கக்கூடிய மக்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்ட உடனே டெல்லிக்கு பறந்து வந்து உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, மாலையிட்டு பாராட்ட வேண்டும் என கருதினேன். அதற்குக் காரணம் என்னவென்று கேட்டால், திராவிட இயக்கக் கொள்கைகளை பிரதிபலிப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. திமுக தேர்தல் அறிக்கை ஹீரோவாகவும், காங்கிரஸ் தேர்தல் அறிக்¬ சூப்பர் ஹீரோவாகவும் உள்ளது. பாஜக தேர்தல் அறிக்கை ஜீரோவாக உள்ளது என குற்றம் சாட்டினார். 

 

Trending News