தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பபுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

Last Updated : Jul 20, 2018, 07:49 PM IST
தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! title=

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பபுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. 
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளத் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில்...

''தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில், கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதேவேலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளது

கடந்த 24 மணிநேரத்தில், நீலகிரியின் தேவாலாவில் 8 செ.மீ. மழையும், கோவையின் வால்பாறையில் 5 செ.மீ மழையும், தேனி பெரியார் மற்றும் கோவை சின்னகல்லாரில் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது'' என தெரிவித்துள்ளது!

Trending News