சென்னை - பெங்களூரு இடையே அமையப்போகும் விரைவுச் சாலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாலை மட்டும் அமைந்தால் பெங்களூரு டூ சென்னை, சென்னை டூ பெங்களூரு செல்ல ஆகும் 6 மணி நேரம் பயண நேரம் பாதியாக குறைந்துவிடும். இந்த மாஸ் பிளானுக்கான பணிகள் எல்லாம் தொடங்கிவிட்டன. இந்தியாவில் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்கள் இரண்டும் மிக முக்கியமான நகரங்களாக இருக்கின்றன. தொழிற்சாலை மற்றும் ஐடி நிறுவனங்கள் அதிகம் மையம் கொள்ளும் தென்னிந்திய நகரங்களாகவும் இருக்கின்றன. இவ்விரு நகரங்களுக்கு இடையிலான சாலை போக்குவரத்து நேரம் மட்டும் குறைந்தால், தொழில் வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும்.
மேலும் மெட்ரோ நகரங்களான இந்த இரண்டு நகரங்களைச் சுற்றியும் துணை நகரங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதனையொட்டி தமிழ்நாடு அரசு சென்னை நகரங்களைச் சுற்றியிருக்கும் துணை நகரங்களில் சாலை போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. இதனால் தொழில் நிறுவனங்களும் அதிகம் தமிழ்நாட்டுக்கு வருவதால் பொருளாதாரம், வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் பெரிதும் எதிர்பார்ப்பது என்னவென்றால் சாலை போக்குவரத்து, தொழில் நிறுவனங்களுக்கு ஏதுவான சூழல். இந்த இரண்டையும் அமைத்துக் கொடுக்க தமிழக அரசு தயாராக இருகிறது. இதைப்போலவே கர்நாடாக அரசும் இருப்பதால் இவ்விரு மாநிலங்களுக்கு இடையே அமைய இருக்கும் இந்த விரைவுச் சாலை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு அப்ளை செய்து 15 நாட்களில் கிடைக்கவில்லையா? உண்மையான காரணம் இதுதான்
மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டத்தின்படியே இந்த சாலை உருவாக்கப்படுகிறது. 17 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை மூன்று கட்டங்களாக அமைய இருக்கிறது. NE-7 என்றும் அழைக்கப்படும், இந்த சாலை 262 கிலோமீட்டர் நீளத்தில் தயாராகிறது. முதல் பகுதி 71 கிலோ மீட்டர் தொலைவு முழுக்க முழுக்க கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட இருக்கிறது. கேஜிஎப் மற்றும் ஹோஸ்ஹோட்டிற்கும் இடையே அமைக்கப்படும் இந்த விரைவுச் சாலை நவம்பர் மாதத்துக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது இவ்விரு நகரங்களுக்கு இடையே 1.50 நிமிடங்களாக இருக்கும் பயண நேரம், புதிய விரைவுச் சாலை அமைக்கப்பட்டவுடன் வெறும் 45 நிமிடத்தில் செல்ல முடியும். எஞ்சிய சாலை பகுதிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட இருக்கின்றன. முழுவதுமாக இந்த விரைவுச் சாலை பணிகள் நிறைவடையும்போது சென்னை டூ பெங்களூரு, பெங்களூரு டூ சென்னைக்கு வெறும் 3 மணி நேரத்தில் செல்ல முடியும்.
மேலும் படிக்க | மதுரையில் பெய்த கன மழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ