ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மாநாட்டில் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

சென்னையில் இன்று தமிழக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாடு துவங்கியது. மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மாநாட்டில் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல். 

Last Updated : Mar 5, 2018, 12:00 PM IST
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மாநாட்டில் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்! title=

இன்று துவங்கிய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகலுக்கான மாநாடுட்டில் தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டுக்கு என்றே தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட கூட்ட அரங்கில் இந்த மாநாடு நடைபெற்றது. 

இந்த மாநாடானது மூன்று நாள் நடைபெறும் என்றும் இதில் 32 மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், ஐ.ஜி-க்கள், டி.ஐ.ஜிக்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 

இந்த மாநாட்டில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல் வழங்கினார். 

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்-களுக்கு முதல்வர் கூறியதாவது....!

> இளைஞர்களிடையே தலைஎடுத்துள்ள ஆயுதங்களைக் கொண்டு அச்சுறுத்தும் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும். 

> கந்துவட்டி புகார்களில் துரித நடவடிக்கை தேவை. 

> லாட்டரி, சூதாட்டம், குட்கா விற்பனை போன்ற குற்றங்கள் இருந்தால் சமந்தப்பட்ட காவலரே பொறுப்பு. 

> மதுரை மீனாட்சியம்மன் கொவ்சிளில் ஏற்படும் தீ விபத்தினை போல் வேறு எங்கும் நிகழக்கூடாது. 

> சேமிப்பு என்ற பெயரில் பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் மற்றது சிறிய சந்தேகம் எழுந்தாலும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 

> மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்கானிப்பளர்கள் இருதுருவங்கள் போல் அல்லாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

> தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் முன் முன் அதற்க்கு தீர்வு காண வேண்டும்.

> பயங்கரவாதம், மதவாதம், இடதுசாரி தீவிரவாதம் சமுதாயத்ததின் மிகப்பெரிய அட்சுருத்தல்களை கண்காணிக்க வேண்டும்.

> வழிப்பறி, நகைப்பறிப்பு ஆகியவற்றை வளர விடாமல் தடுக்க வேண்டும். 

> சாதி மோதல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்க வேண்டும். 

என ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்-களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். 

Trending News