முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தொகை உயர்வு: TN Govt

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!

Last Updated : Nov 30, 2018, 01:37 PM IST
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தொகை உயர்வு: TN Govt  title=

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாயாக வழங்கப்பட்டு வரும் காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 26 லட்சத்து 96 ஆயிரம் பேர், 5 ஆயிரத்து 133 கோடி ரூபாய் அளவு பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகள் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை, மேலும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கைகள் வந்ததாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனைப் பரிசீலித்து 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதன்படி, நாளை முதல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடியே 58 லட்சம் குடும்பங்கள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Trending News