வடபழனி பேருந்து பணிமனை விபத்து; முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!

வடபழனி பேருந்து பணிமனையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு முதல்வர் பழனிசாமி அவர்கள் நிதி உதவி அறிவித்துள்ளார்!

Last Updated : Aug 25, 2019, 10:01 PM IST
வடபழனி பேருந்து பணிமனை விபத்து; முதல்வர் நிதியுதவி அறிவிப்பு! title=

வடபழனி பேருந்து பணிமனையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு முதல்வர் பழனிசாமி அவர்கள் நிதி உதவி அறிவித்துள்ளார்!

சென்னை மாவட்டம், மாம்பலம் வட்டம், வடபழனி பேருந்து பணிமனையில் 28.7.2019 அன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கட்டட சுவர் மீது மோதி, சுவர் இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்தில் இருந்த மாநகர போக்குவரத்துப் பணியாளர்களான சென்னையைச் சேர்ந்த திரு. கே. சேகர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ப. பாரதி ஆகியோர் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

கட்டட சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த திரு. சேகர் மற்றும் திரு. பாரதி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தில் ஆறு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்த தமிழக முதல்வர், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு சிறப்பு நிகழ்வாக தகுதியின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளர்.

Trending News