ஆளுநரின் கருத்தை முதலமைச்சர் பொருட்படுத்துவதே இல்லை - அமைச்சர் எ.வ. வேலு!

தமிழ்நாடு அரசும், தமிழநாடு முதல்வரும் ஆளுநர் கருத்தை பெரிதுபடுத்துவது இல்லை என பொதுப்பணித்துறை அமைச்சர்  எ.வ.வேலு பேட்டியளித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : May 8, 2023, 12:32 AM IST
  • ஜூன் மாதத்தில் மதுரை கலைஞர் நூலகம் திறக்கப்பட வாய்ப்பு.
  • 114 கோடி ரூபாய் செலவில் மதுரையில் நூலகம் கட்டப்பட்டுள்ளது.
  • ஆளுநர் போகிற போக்கில் ஏதேதோ கருத்தை சொல்லி கொண்டிருக்கிறார் - எ.வ. வேலு
ஆளுநரின் கருத்தை முதலமைச்சர் பொருட்படுத்துவதே இல்லை - அமைச்சர் எ.வ. வேலு! title=

மதுரையில் 114 கோடி ரூபாய் செலவில் மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில், 2 லட்சத்து 40ஆயிரம் சதுர அடி பரப்பில், 7 தளங்களுடன் கருணாநிதி பெயரில், சர்வதேச தரத்தில் நுாலகம் அமைக்கப்பட்டு உள்ளது. 

கலைஞர் நுாலகம் கட்ட 99 கோடி ரூபாயும், புத்தக கொள்முதல், புத்தகங்களை டிஜிட்டல் வழிக்கு மாற்ற 10 கோடி ரூபாய், தொழில்நுட்ப கருவிகள் வாங்க 5 கோடி ரூபாய் என 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலக பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

அமைச்சர் பேட்டி

ஜூன் மாதம் கலைஞர் நூலகம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷேசேகர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளோடு திறப்பு விழா மற்றும் இறுதிகட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க | ஆளுநர் என்ன ஆண்டவரா?...கொதித்தெழுந்த அமைச்சர் சேகர்பாபு விளாசல்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்,"கலைஞர் பெயரால் அமையும் நூலகத்தை முதல்வர் குறிப்பிட்ட தேதியை அறிவித்து விரைவில் திறந்து வைக்க உள்ளார். நூலகத்தில் மே 15ஆம் தேதிக்குள் நூல்கள் அடுக்கும் பணிகள் முழுமை அடைந்துவிடும். மே 30ஆம் தேதிக்குள் கலைஞர் சிலை மற்றும் அனைத்து கட்டட பணிகளும் முழுமை பெறும். தமிழக இளைஞர்களின் நலனுக்காக வேலைவாய்ப்பை உருவாக்க மட்டுமே முதல்வர் வெளிநாடு செல்கிறார்" என்றார். 

இரு மொழிக்கொள்கையே...!

கலைஞர் நூலகத்தில் பிறமொழி நூல்கள் குறித்த ஆளுநரின் கருத்து குறித்த கேள்விக்கு,"அரசு செம்மையாக நடைபெற வேண்டுமானால் ஆளுநர் உந்துசக்தியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் உதவுகிற மனம் படைத்தவராக இருக்க வேண்டும். அப்படித்தான் அரசும் கருதும். ஆனால் ஆளுநர் போகிற போக்கில் ஏதேதோ கருத்தை சொல்லி கொண்டிருக்கிறார். ஆளுநரின் கருத்தை தமிழக அரசு, திராவிட மாடல் அரசு, தமிழ்நாடு முதல்வர் பெரிதுபடுத்துவதே இல்லை. 

தமிழகத்திற்கு தனிக்கொள்கைகள் உண்டு. அண்ணா காலத்தில் இருந்தே தமிழகம் இருமொழிக்கொள்கை உடைய மாநிலம். தமிழ், ஆங்கிலம் தான் இங்கு இருக்கும். தமிழுக்கு தான் இங்கு முதலிடம். இணைப்பு மொழியான ஆங்கிலத்திற்கு இரண்டாவது இடம். அண்ணா கலைஞரின் இருமொழிக்கொள்கையை முதல்வரும் பின்பற்றி வருகிறார். அதன்படி கலைஞர் நூலகத்தில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன. கலைஞர் நூலகத்தில் இருமொழிக்கொள்கையையே கடைபிடிக்கப்படும்" என பேசினார்.

மேலும் படிக்க | புதுமைப் பெண் திட்டம்: திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டம் - உயர்க்கல்வியால் உயரும் பெண்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News