டெல்லியில் சங்கமம்: மல்கோவா மாம்பழத்துடன் இபிஎஸ்... காலையில் சென்ற ஆளுநர்... ஸ்டாலின் நாளை பயணம்!

தமிழ்நாட்டின் ஆளுநர், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் ஒரே காலகட்டத்தில் டெல்லியில் முகாமிட உள்ளது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 27, 2023, 01:25 PM IST
  • மூன்று நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி சென்றார்.
  • மல்கோவா மாம்பழத்துடன் இன்று இபிஎஸ் பயணம்.
  • முதலமைச்சர் ஸ்டாலின் நாளை பயணம்.
டெல்லியில் சங்கமம்: மல்கோவா மாம்பழத்துடன் இபிஎஸ்... காலையில் சென்ற ஆளுநர்... ஸ்டாலின் நாளை பயணம்! title=

அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அண்ணாமலை அதிமுக கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். மேலும், திமுகவுக்கு வெளியிட்டது போன்று அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அவர் பேசியதை தொடர்ந்து அதிமுக-பாஜக என இரு கட்சிகளுக்கிடையே காரசார பேச்சுகள் எழுந்தன.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி கட்சி குறித்து விவாதிக்கவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து வேறுபாடுகள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசுவதற்கு, எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி டெல்லி சென்றடைந்தனர்.

முன்னதாக, டெல்லி செல்ல கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின், முதன் முறையாக  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றார். அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்திற்காக, புகழ்பெற்ற சேலத்து மல்கோவா மாம்பழத்தை எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

மேலும் படிக்க | கோழைத்தனமான பிளாக்‌ மெயில்‌ கும்பல்‌... அண்ணாமலை ஆடியோவுக்கு பிடிஆர் விளக்கம்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை அடுத்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை (ஏப். 27) இரவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை மறுநாள் (ஏப். 28) ஜனாதிபதியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து, விமர்சனங்களை எழுந்து வருகிறது. எனவே, குடியரசு தலைவருடனான சந்திப்பின் போது கவர்னரின் செயல்பாடுகள் குறித்தும், ஒப்புதல் அளிக்கப்படாமல் இருக்கும் கோப்புகள் குறித்தும் கோரிக்கை வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கர்வனர்களுக்கு கால நிர்ணயம் வேண்டி சட்டப்பேரவையில் மசோதா ஒன்றை திமுக அரசு நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஏப். 26) காலை டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஆளுநர் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றார். அவர் ஏப். 28ஆம் தேதி அதாவது முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசு தலைவரை சந்திக்கும் தினத்தில் தமிழ்நாடு திரும்ப உள்ளார். தமிழ்நாட்டின் ஆளுநர், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் ஒரே காலகட்டத்தில் டெல்லியில் முகாமிட உள்ளது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News