CM Stalin to PM Modi: தமிழகத்தின் ஆக்ஸிஜன் தேவை 2 வாரங்களில் இரு மடங்காகும்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , கொரோனா வைரஸ் தாக்கத்தை சமாளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 7, 2021, 10:11 PM IST
  • தமிழகத்தின் ஆக்ஸிஜன் தேவை 2 வாரங்களில் இரு மடங்காகும்
  • மே 1, 2 தேதிகளில் நடைபெற்ற அரசு கூட்டங்களில் ஒப்புக் கொள்ளப்பட்டதற்கு ஏற்ப, கூடுதல் மருத்துவ ஆக்ஸிஜனை உடனடியாக வழங்க கோரிக்கை
  • தமிழகத்தில் மருத்துவ ஆக்ஸிஜனின் தற்போதைய தேவை 440 MTs
CM Stalin to PM Modi: தமிழகத்தின் ஆக்ஸிஜன் தேவை 2 வாரங்களில் இரு மடங்காகும் title=

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவலால் நாடே தவித்துக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. மருத்துவ உதவிகள், ஆக்சிஜன், சுகாதார வசதிகள் என அனைத்தும் பற்றாக்குறையாக இருக்கும் அவலநிலையை காண முடிகிறது.

தமிழகத்தில் இன்று ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா வைரஸ் தாக்கத்தை சமாளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், மே 1, 2 தேதிகளில் நடைபெற்ற அரசு கூட்டங்களில் ஒப்புக் கொள்ளப்பட்டதற்கு ஏற்ப, கூடுதல் மருத்துவ ஆக்ஸிஜனை உடனடியாக வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | தமிழகத்தின் நிதி & மனிதவள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகம் ஆக்ஸிஜன் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மருத்துவ ஆக்ஸிஜனின் தற்போதைய தேவை 440 MTs  என்ற அளவில் இருந்து 840 MTs என்ற அளவிற்கு உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆக்ஸிஜன் திட்டத்தைப் பற்றி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தமிழகத்திற்கு 220MTs மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, இதையாவது தினசரி அடிப்படையில் தொடர்ந்து வழங்குமாறு அதிகாரிகள் DPIIT இடம் (மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில்) கோரியிருந்தனர். 476MT மருத்துவ ஆக்ஸிஜனை வழங்க டிபிஐடிடி (DPIIT) ஒப்புக் கொண்ட போதிலும், அது தொடர்பான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

மத்திய அரசு ஊடகங்களில் திருத்தப்பட்ட ஆக்சிஜன் ஒதுக்கீட்டு உத்தரவுகளை வெளியிட்டது. கிட்டத்தட்ட தினசரி 220MTs மருத்துவ ஆக்ஸிஜன் என்ற ஒதுக்கீடுக்காக கேரளா, தமிழ்நாடு மற்றும் ரூர்கேலா காத்திருக்கின்றன.

Also Read | World Test Championship இந்திய அணி அறிவிப்பு, ஜடேஜா உள்ளே

சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 13 நோயாளிகள் இறந்ததைக் குறிப்பிட்ட தமிழக முதலமைச்சர், தமிழகத்திற்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல குறைந்தது 20 ஐஎஸ்ஓ கிரையோஜெனிக் கொள்கலன்களையும் (ISO Cryogenic Containers) ரயில்களையும் வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார்.

வெள்ளிக்கிழமையன்று (2021, மே 07), தமிழகத்தில் 26,465 பேருக்கு புதிதாக கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று 22.381 பேர் நோயில் இருந்து குணமாகியுள்ளனர். தற்போது தமிழகத்தில் 1,35,355 பேர் கோவிட் நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 197 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கின்றனர். 

Also Read | கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் - EPS and OPS தரப்பு மோதல்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News