கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 27, 2019, 04:52 PM IST
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை title=

கோவை: கடந்த மார்ச் மாதத்தில் கோயம்புத்தூர் பன்னிமடையில் ஏழு வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த சந்தோஷ்குமார் மற்றும் மற்றொருவரும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு அந்த சிறுமி அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்றவரை கைது செய்து விசாரணைக்கு மேற்கொண்டதில் அவர்தான் குற்றவாளி எனத் தெரிந்த பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

முதலில் பாலியல் வன்கொடுமை வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதன்பிறகு போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் நேற்று தடயவியல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவரின் தடயவியல் பரிசோதனை அறிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள டி.என்.ஏ மாதிரிகளில் தடயங்கள் காணப்பட்டன.

இதனையடுத்து சந்தோஷ்குமார் தான் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றவாளிக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஏழு வயது சிறுமியின் தாய் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் எனது மகளின் தடயவியல் பரிசோதனை அறிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதற்கான தடயங்கள் உள்ளன. இதுக்குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்க்கு சம்பந்தமாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News