மகளின் ஆசை: கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்ந்த இஸ்லாமிய தம்பதியினர்

மதம் கடந்து, பெற்ற மகளின் ஆசையை நிறைவேற்ற கிருஷ்ணர் வேடம் தரிக்கவைத்து அழகுபார்த்த இஸ்லாமியத்தம்பதியினரின் செயல் பலரிடம் பாராட்டுதலைப்பெற்று வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 20, 2022, 11:27 AM IST
  • குழந்தைக்கு கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்ந்த இஸ்லாமிய தம்பதி
  • களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி விழா
மகளின் ஆசை: கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்ந்த இஸ்லாமிய தம்பதியினர் title=

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. நாட்டின் முக்கிய கோவில்களில் கிருஷ்ண ஜெயந்திவிழா கொண்டாட்டத்தில் பெரும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். இஸ்கான் சார்பில் சென்னை மற்றும் கோயமுத்தூரில் கிருஷ்ண ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது. அதேபோல் பெங்களூர், ஹைதராபாத்,மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி வண்ண விளக்குகள், ஆராதனைகள் பஜனைகளுடன் கொண்டாடப்பட்டது.

அத்துடன் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தயில் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர். இதே போல் குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா, மதுரா உள்ளிட்ட இடங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா களை கட்டியது.

மேலும் படிக்க | ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: பூஜை நேரம், முகூர்த்தம் மற்றும் யோகம் குறித்த விவரம்

அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் இதயதுல்லா- தாஹிதா பேகம் இஸ்லாமிய தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள், அதில் 5 வயது நிரம்பிய இரண்டாவது குழந்தை ஹேனா, கிருஷ்ண ஜெயந்தியான இன்று தொலைக்காட்சியில் சுட்டிக் கிருஷ்ணரை பற்றிய நிகழ்வுகளை பார்த்து விட்டு, பெற்றோரிடம் கிருஷ்ணர் வேடமிடுமாறு ஆசையாய் கேட்டுள்ளார். 

மேலும் படிக்க: சூரியனின் பெயர்ச்சியால் ஜென்மாஷ்டமியில் இருந்து மகிழப்போகும் 4 ராசிகள்

பெற்றோர்களும் தாங்கள் இஸ்லாமியர்களாய் இருந்தாலும் மதங்களை கடந்து பெற்ற மகளின் ஆசையை நிறைவேற்றுவது என முடிவெடுத்து தாம்பரம் சந்தைக்கு சென்று கிருஷ்ணர் வேடமிட தேவையான மயில் இறகு, புல்லாங்குழல், சிறிய பானை, ஆடை, என அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து அலங்கார பொருட்களை வைத்து கிருஷ்ணர் வேடமிட்டு தெருவில் நடக்க விட்டு மகிழ்ந்தனர். 

மேலும் படிக்க: Krishna Jayanthi: கோபிகைகளின் பானையை கண்ணன் ஏன் உடைத்தார்? உறியடியின் பின்னணி ரகசியம்!

மனிதர்கள் மதங்களை தூக்கிப் பிடித்து கொண்டிருக்கும் வேலையில் குழந்தையின் ஆசையை, மதங்களை கடந்து ஒதுக்கி வைத்து விட்டு கிருஷ்ணர் வேடமிட்ட சம்பவத்தை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க: சூரியனின் பெயர்ச்சியால் ஜென்மாஷ்டமியில் இருந்து மகிழப்போகும் 4 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News