DMDK சார்பில் போட்டியிட விருப்ப மனு வேட்பாளர்களிடம் 13-ல் நேர்காணல்..

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி நேர்காணல்!!

Last Updated : Mar 11, 2019, 10:59 AM IST
DMDK சார்பில் போட்டியிட விருப்ப மனு வேட்பாளர்களிடம் 13-ல் நேர்காணல்..  title=

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி நேர்காணல்!!

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 18 ஆம்  தேதி வாக்குப்பதிவு நடைபெறும். புதுச்சேரியிலும் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடைபெறும். வேட்புமனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்குகிறது. தாக்கலுக்கான கடைசிநாள் மார்ச் 26. வேட்புமனு திரும்பப்பெறும் கடைசி நாள் மார்ச் 29 ஆம் தேதி என நேற்று தேர்தல் ஆணையர் சுனில் அரோர அறிவித்தார். 

இதையடுத்து, நீண்ட இழுபறிக்கு பின்னர் மக்களவை தேர்தலில் ADMK கூட்டணியில் DMDK-க்கு 4 தொகுதி ஒதுக்கீடு செய்து நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்க்காணல் வரும் 13 ஆம் தேதி நடைபெறும் என தேசிய முற்போக்கு திராவிடகழகம் அறிவித்துள்ளது. 

இது குறித்து தேசிய முற்போக்கு திராவிடகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய முற்போக்கு திராவிடகழகத்தின் சார்பில் வருகிற 2019 பாராளுமன்ற தேர்தலுக்காக தாங்கள் தொகுதியில் போட்டியிட விரும்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் மார்ச் 13 ஆம் தேதி காலை 10 மணியளவில் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் முன்னிலையில், ஒரே நாளில் நடைபெற இருக்கிறது. எனவே, விருப்ப மனு கொடுத்துள்ளவர்கள் தாங்கள் குறிப்பிட்டுள்ள தேதியில் நேரில் வரவேண்டும். வரும் போது, கழக உறுப்பினர் அட்டை வாக்களர் அட்டை, கல்வி சான்றிதல், தனித் தொகுதிக்கு ஜாதி சான்றிதல் ஆகியவற்றின் நகல் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

 

Trending News