1949 முதல் தொண்டர்... திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்

1949-ல் திமுக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொண்டராக இருந்த, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இன்று காலமானார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 7, 2020, 05:31 AM IST
1949 முதல் தொண்டர்... திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார் title=

சென்னை: 1949-ல் திமுக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொண்டராக இணைத்துக்கொண்டு, கட்சிகாக அரும்பாடுபட்டு, பல முயற்சிகள் செய்து, கட்சியின் பொதுச் செயலாளராக உயர்ந்த பேராசிரியர் க.அன்பழகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 97 வயதாகும் அன்பழகனுக்கு வயது முதிர்வு காரணமாக, அவரது உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24 ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்.

 

திரு. க.அன்பழகன் 1977 முதல் ஒன்பது முறை திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தார். அவர் ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாகவும், திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தேடுக்கப்பட்டார். தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சராகவும் இருந்துள்ளார்.  அதுமட்டுமில்லாமல் முன்னாள் முதல்வர் எம் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பர் ஆவார்.

1944 முதல் 1957 வரை பச்சயப்பா கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியதால் அவர் பேராசிரியர் (Professor) என்று அழைக்கப்பட்டார். பின்னர் அவர் ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிட்டார்.

திரு க.அன்பழகன் மரணம் குறித்து திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

Trending News