தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!

திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Updated: Jan 3, 2018, 10:54 AM IST
தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!
ZeeNewsTamil

நடிகர் ரஜினி கடந்த 31-ம் தேதி தனது ரசிகர்களுக்கு அரசியளுக்கு வருவதாக தெரிவித்தார். மேலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனிக்கட்சி தொடங்கி தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்முரமாக செயல்பட்டு வருகிறார். பிரத்யேக இணையதளத்தையும் ரஜினி தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டில் நல்ல ஒரு அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய இரண்டையும் www.rajinimadram.org என்ற வலைதளபக்கத்தில் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை ரஜினி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இன்று மாலை இந்த சந்திப்பு நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.